»   »  "விஜயகாந்த் ஸ்டைலில்" துப்பி துப்பி விளையாடிய ஷாருக், குட்டி ஆப்ராம்: வீடியோ

"விஜயகாந்த் ஸ்டைலில்" துப்பி துப்பி விளையாடிய ஷாருக், குட்டி ஆப்ராம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், அவரது மகன் ஆப்ராமும் தண்ணீரை வைத்து விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ பலரை கவர்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தை பார்க்க கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் தனது இளைய மகன் ஆப்ராமுடன் வந்திருந்தார்.

மைதானத்தில் கிரிக்கெட் போட்டி சுவாரஸ்யமாக நடந்தபோது ஷாருக்கும், அவரது மகனும் பலூன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது அங்கிருந்த திரையில் காண்பிக்கப்பட்டது. உடனே மக்கள் கைதட்டியவுடன் அது தங்களுக்கு தான் என்பதை உணர்ந்த ஷாருக் எழுந்து நின்று கையசைத்தார்.

அதன் பிறகு மைதானத்தில் நடந்து வந்த ஆப்ராமின் வாயில் ஷாருக்கான் தண்ணீரை ஊற்ற பொடியன் அதை தந்தையின் முகத்தை துப்பிவிட்டான். இதை பார்த்த ஷாருக் பதிலுக்கு தன் வாயில் நீரை ஊற்றி மகன் மீது துப்பி விளையாடினார்.

இப்படி தந்தையும், மகனும் மாறி மாறி துப்பி, துப்பி விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

English summary
Video of Bollywood actor Shahrukh Khan and his son Abram playing with water has attracted many.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil