»   »  உச்சம் தொட்ட பாகுபலி... மேடம் டுசாட்ஸில் பிரபாசுக்கு மெழுகுச் சிலை!

உச்சம் தொட்ட பாகுபலி... மேடம் டுசாட்ஸில் பிரபாசுக்கு மெழுகுச் சிலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வசூலிலும் பாராட்டிலும் உலகயே அசத்திய எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலிக்கு புதிய மரியாதை கிடைத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது.

Wax statue at Madam Tussaud for Bahubali

2017ம் ஆண்டு பாங்காக்கில் நடக்கவுள்ள மேடம் டுசாட்ஸ் நிகழ்வுக்காக பிரபாஸ்ஸின் பாகுபலி மெழுகுச் சிலை வடிவமைக்கப்படுகிறது.

Wax statue at Madam Tussaud for Bahubali

இச்சிலை வடிவமைப்பிற்காக ஹைதராபாத்தில் மேடம் டுசாட்ஸ் குழு நடிகர் பிரபாஸ்ஸின் பல்வேறு விதமான அளவிடுகள் எடுக்கும் வகையில் 350க்கும் மேற்பட்ட புகைபடங்களை எடுத்துள்ளனர். எந்த வித வித்தியாசமும் தெரியாத அளிவிற்கு சிறந்த முறையில் அனைத்து அளவிடுகளை முறையே எடுத்து மெழுகு சிலை வடிவமைக்கவிருப்பதாக அந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

Wax statue at Madam Tussaud for Bahubali

இதுகுறித்து பிரபாஸ் கூறுகையில், "மேடம் டுசாட்ஸ் என்னை தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இதற்கு காரணமாய் இருந்த எனது ரசிகர்களின் அளவில்லா அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி. பாகுபலியில் என்னை நடிக்க வைத்த எனது குரு எஸ்எஸ் ராஜமெளலி அவர்களுக்கும் இத்தருணத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்," என்றார்.

English summary
Madame Tussauds Bangkok will be seeing more of Baahubali in the coming year 2017. With a new wax figure Prabhas is being immortalized and will be joining the ranks of the world’s most famous personalities exclusively at Madame Tussauds’ attraction in Bangkok in March 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil