»   »  எப்பவுமே நாம மாஸ் தான் பாஸு: வெங்கட் பிரபு

எப்பவுமே நாம மாஸ் தான் பாஸு: வெங்கட் பிரபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடித்துள்ள படத்தின் தலைப்பு மாற்றப்பட்டாலும் எப்பொழுதுமே நாம் தான் மாஸ் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ். அண்மையில் வெளியான படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் வரி விலக்கு பெற வேண்டி வெங்கட் பிரபு தனது படத்தின் தலைப்பை மாஸ் என்கிற மாசிலாமணி என்று மாற்றியுள்ளார்.


மாஸ் என்ற தலைப்பு கெத்தாக இருந்தது இது என்ன மாசிலாமணி என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களை புதிய தலைப்பு கவரவில்லை. இந்நிலையில் படத்தின் தலைப்பு மாற்றம் பற்றி வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.


மாஸ்

மாஸ்

படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதன் காரணம் உங்களுக்கே நன்றாக தெரியும். தலைப்பு எதுவாக இருந்தால் என்ன, எப்பொழுதும் நாம் தான் மாஸ். தலைப்பை போடாமல் தான் படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக்கை வெளியிட்டோம். படத்தின் தலைப்பு ஒரு பிரச்சனையே கிடையாது என்கிறார் வெங்கட் பிரபு.


சூர்யா

சூர்யா

படம் அருமையாக வந்துள்ளதற்கு சூர்யா தான் முக்கிய காரணம். அவர் அவ்வளவு எளிதில் திருப்தி அடையாதவர். இதை இன்னும் சிறப்பாக செய்யலாமே என்று கூறி ஒரு காட்சி அருமையாக வரும் வரை ஓயமாட்டார் என்று வெங்கட் தெரிவித்துள்ளார்.


பேய்

பேய்

நான் மாஸ் படத்தின் திரைக்கதையை கடந்த ஜனவரி மாதம் எழுதத் துவங்கினேன். அப்போது பேய் காமெடி படங்கள் அவ்வளவாக ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் தற்போதோ ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார் வெங்கட்.


மாசிலாமணி

மாசிலாமணி

படத்தில் சூர்யாவின் பெயர் மாசிலாமணியாம். அதை சுருக்கி அவரது நண்பர்கள் மாஸ், மாஸுன்னு அழைப்பார்களாம். இந்த முக்கிய தகவலை தெரிவித்தது வேறு யாரும் இல்லை பிரேம்ஜி அமரன் தான்.


English summary
Venkat Prabhu told that title change of his movie Masss in not at all an issue. He is so confident of his movie's outcome as Suriya has pushed him to excellence.
Please Wait while comments are loading...