"நாங்க இருக்கோம் தலைவா"...பக்குவமான கமெண்ட்ஸ்...சபாஷ் போட வைத்த ரஜினி ரசிகர்கள்
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும், 18 வருடங்கள் தம்பதிகளாக இருந்த தாங்கள் தற்போது பிரிய முடிவு செய்திருப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இதை பார்த்த பலரும் தங்களின் அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்தனர்.
Recommended Video
இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என பலரும் பல விதமாக தகவல்களை பகிர்ந்தனர். தனுஷின் திருமண போட்டோக்கள், மகன்களுடன் இருக்கும் பழைய போட்டோ, மனைவிக்காக காதலுடன் பாடல் பாடிய வீடியோ ஆகியவற்றை அதிகம் பகிர்ந்தனர். இதனால் #Dhanush, #Rajinikanth, #divorce, #Aishwarya போன்ற ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டன.

ரஜினியை பற்றி தான் கவலை
ஆனால் இவற்றில் ஒரு சில ரசிகர்கள் தவிர, பெரும்பாலான ரசிகர்கள் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரசிகர்களின் ஒட்டுமொத்த கவலையும் ரஜினியை பற்றி தான். ரஜினிக்கு ஆறுதல் கூறும் வகையில் ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் #Thalaiva ஹாஷ்டேக் தற்போது டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

ஆச்சரியப்பட வைத்த ரசிகர்கள்
தனுஷ் விவாகரத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே, விவாகரத்திற்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை பற்றிய ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ரசிகர் என்றால் அவர்களின் படங்களை மட்டும் தான் விமர்சிக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது. பிரியமானவர்களை பிரிவதை எவ்வளவு வலியானது என்பது அவர்களுக்கு தான் தெரியும். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மிக பக்குவமாக கமெண்ட் செய்து பலரும் ஆச்சரியப்பட வைத்தனர்.

நாங்க இருக்கோம் தலைவா
தனுஷ் விவாகரத்து விஷயத்தை ரசிகர்கள் தற்போது விட்டு விட்டார்கள். ரஜினியை பற்றி கவலை தெரிவித்தே பலரும் கமெண்ட் செய்து வருவது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. கவலைப்படாதீர்கள். நாங்க இருக்கோம் தலைவா. இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக் கொண்டு, ரசிகர்களின் அன்பிற்கு மரியாதை கொடுத்து, புத்தாண்டு மற்றும் பொங்கல் அன்று வாசலுக்கே வந்து, சிரித்த முகத்துடன் ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டீர்கள். எல்லோரும் ரஜினி ஆகி விட முடியாது. அதனால் தான் அவரை சூப்பர் ஸ்டார்கள் என்கிறார்கள்.

Stay strong தலைவா
71 வயதில் தனது இளைய மகளின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் இருந்து முழுவதுமாக மீண்டு வருவதற்குள், தற்போது மூத்த மகளுக்கும் இப்படி ஒரு நிலை. ஒரு பெற்றோராக அவர் எத்தனை மன அழுத்தங்கள், வேதனைகளை தாங்கிக் கொண்டிருப்பார். கடவுள் துணை நிற்பார். Stay strong Thalaiva. We stands for you thalaiva என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதை பார்த்து மற்ற நடிகர்களின் ரசிகர்கள் ஆச்சரியமும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











