நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க.. வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: கதறுறவங்க கதறட்டும் இந்த சீசன் வின்னர் நான் தான் என பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் என்றால் அது 6வது சீசன் தான்.

அசீமுக்கு டைட்டில் கொடுத்ததற்கு எதிராக பலரும் பலவிதமான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் கெத்தாக தனக்கு சப்போர்ட் செய்தவர்களுடன் அசீம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

எதிர்பாராத வெற்றி

எதிர்பாராத வெற்றி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஜனவரி 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் மூவரில் யார் வெற்றி பெறுவார்கள் என பெரிய எதிர்பார்ப்பே நிலவியது. விக்ரமனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எல்லாம் சப்போர்ட் செய்த நிலையில், விக்ரமன் தான் வின் பண்ணுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல அசீம் டைட்டிலை தட்டித் தூக்கினார்.

அதிக பரிசு

அதிக பரிசு

இதுவரை இல்லாத அளவுக்கு அசீமுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுடன் சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கி விஜய் டிவி வேறலெவலில் அசீமின் வெற்றியை கொண்டாடியது. ஆனால், விக்ரமன் வெற்றி பெறவில்லை என்கிற விரக்தியால் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் அசீமின் வெற்றியை பெரியளவில் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

வனிதாவுடன் சந்திப்பு

வனிதாவுடன் சந்திப்பு

விக்ரமனுக்கு திருமாவளவன் ட்வீட் போட்டு வாக்கு சேகரித்த நிலையில், உடனடியாக அதை கடுமையாக எதிர்த்தது வனிதா மற்றும் பிரசாந்த் ரங்கசாமி தான். இருவரும் அசீமுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், தற்போது வனிதா விஜயகுமாரை சந்தித்து அசீம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

பிரேக் தி ரூல்ஸ்

பிரேக் தி ரூல்ஸ்


நாங்க இங்க உதாரணங்களாக வாழ விரும்பவில்லை. இங்கே இருக்கக் கூடிய ரூல்களை பிரேக் பண்றவங்க என அசீம் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது முழு ஆதரவையும் தெரிவித்து இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

வனிதா மகள்

வனிதா மகள்

வனிதா விஜயகுமார் மற்றும் சில நண்பர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் புகைப்படங்கள் எடுத்து கொண்ட போது, வனிதா விஜயகுமாரின் மகளும் அசீம் உடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த போட்டோக்களை பார்த்த அசீம் ரசிகர்கள் லைக் போட்டு வருகின்றனர். விக்ரமன்ரசிகர்கள் இதுக்குத்தான் அப்படி சப்போர்ட் பண்ணீங்களா என விளாசி வருகின்றனர்.

கருத்த கம்மியா சொல்லுங்க

கருத்த கம்மியா சொல்லுங்க

அசீம் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க என வனிதா விஜயகுமார் பதிவிட்ட ட்வீட்டை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். கருத்தை கம்மியா சொல்லுப்பா, கண்ணுல இருந்து தண்ணி வருதுல்ல என மீம் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இனம் இனத்தோட சேரும்

இனம் இனத்தோட சேரும்

இன்னொரு பிக் பாஸ் ரசிகர் இந்த புகைப்படங்களை பார்த்து விட்டு "இனம் இனத்தோட தான் சேரும் என பங்கமாக கலாய்த்துள்ளார். விக்ரமன் ரசிகர்கள் அப்படித்தான் வயிற்றெரிச்சலில் பேசுவாங்க நீங்க கலக்குங்க அக்கா என வனிதா ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X