அர்ஜுன் தாஸை காதலிக்கிறாரா ஐஸ்வர்யா லக்‌ஷ்மி? அவரே சொன்ன ஹாட் தகவல்.. என்ன இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கைதி பட வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படத்தை பதிவிட்டு ஹார்ட் எமோஜியை பதிவிட்டது பரபரப்பை கிளப்பியது.

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தனது காதலை வெளிப்படையாக அறிவித்து விட்டார் என பலரும் நம்பினர்.

இந்த விஷயம் பூதாகரமான நிலையில், நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நாங்கள் இருவருமே நண்பர்கள் தான் காதலர்கள் இல்லை என அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகையுடன் காதலா

நடிகையுடன் காதலா

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த கட்டா குஸ்தி ஹீரோயின் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிகர் அர்ஜுன் தாஸ் தோளில் சாய்ந்துக் கொண்டு படு ரொமாண்டிக்காக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கூடவே ஹார்ட் சிம்பிளையும் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை வாழ்த்தினர்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

சென்னை பையன் அர்ஜுன் தாஸுக்கு 32 வயதாகிறது. 2012ல் வெளியான பெருமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். ரகுவரன் போல வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரரான இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி படத்தில் வில்லனாக நடித்து கலக்கினார். அந்த படத்தில் இவர் பேசிய பிரபலமான லைஃப் டைம் செட்டில்மென்ட் டா வசனத்தையே ரசிகர்கள் கமெண்ட் போட்டு வாழ்த்தினர்.

அலறிய ஐஸ்

அலறிய ஐஸ்

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கும் அர்ஜுன் தாஸுக்கும் ஒரே வயசு தான் ஆகிறது. இருவரும் எப்படி காதலிக்கின்றனர் என ரசிகர்கள் பலவித கேள்விகளையும் கூடவே எழுப்பி வந்தனர். இந்நிலையில், அவர்கள் கெஸ் செய்ததை போலவே நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி காதலிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

பூங்குழலி கமிட்டடா

பூங்குழலி கமிட்டடா

விஷாலின் ஆக்‌ஷன் படத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி அதன் பின்னர் தனுஷ் உடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக அந்த கடலில் இருந்து படகுக்கு அவர் எழுந்து வந்த காட்சியால் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தனர். தற்போது அவர் கமிட்டடா என்கிற கசப்பான கேள்வி ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது.

கட்டா குஸ்தி கம்பேரிசன்

கட்டா குஸ்தி கம்பேரிசன்

கட்டா குஸ்தி படத்தில் தமிழ்நாட்டு பையனுக்கும் கேரள பொண்ணுக்கும் திருமணம் நடக்கும் அதே போல தற்போது ரியல் கட்டா குஸ்தியாகவே சென்னை பையன் அர்ஜுன் தாஸ் மற்றும் கேரளா பொண்ணான ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர் என பெரும் பேச்சு நிலவிய நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.

நண்பர்கள் தான்

நண்பர்கள் தான்

அர்ஜுன் தாஸும் நானும் கேஷுவலாக சந்தித்தோம். அப்போது எடுத்துக் கொண்ட பதிவை போட்டு ஒரு ஹார்ட்டின் எமோஜியை சும்மா தட்டி விட்டேன். அதற்குள் அது இப்படி பூதாகரமாக வெடிக்கும் என கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை, வெறும் நண்பர்கள் தான் என விளக்கம் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X