»   »  நாங்கள்லாம் மியூசிக் டைரக்டர்கள்... ஆனா அப்பா ஒருத்தர்தான் மியூசிக் கம்போஸர்! - யுவன்

நாங்கள்லாம் மியூசிக் டைரக்டர்கள்... ஆனா அப்பா ஒருத்தர்தான் மியூசிக் கம்போஸர்! - யுவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
திரையுலகில் என்னைப் போன்றவர்கள் இசை இயக்குநர்களாக இருக்கலாம். ஆனால் இசையை உருவாக்கும் கம்போஸர் என்ற அந்தஸ்துள்ள ஒருவர் அப்பா மட்டுமே (இசைஞானி இளையராஜா), என்று கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

இளையராஜா இசையமைத்துள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். சாய்ந்து சாய்ந்து என்று தொடங்கும் அந்தப் பாடலின் பைனல் மிக்ஸிங் முடிந்த பிறகு, பாட்டைக் கேட்டுள்ளார் யுவன்.

தன் வாழ்நாளில் அத்தனை சிறப்பான இசையைக் கேட்டதில்லை என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த, யுவன் இந்த வாய்ப்புக்காக இசைஞானிக்கும் இயக்குநர் கவுதமுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ளது:

சாய்ந்து சாய்ந்து பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன். ஒரு பைத்தியம் மாதிரி அதிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடலில் ஒரு பகுதியாக நான் இருந்தது ஆசீர்வாதம். கற்பனைக்கெட்டாத இசை. அப்பா கிரேட்!

அந்தப் பாடலின் இறுதி வடிவம் கேட்டதும், பேச்சற்றுப் போனேன். தூய்மையான இசையென்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன். இந்தப் பாடலை பாடச் செய்த கவுதமுக்கு நன்றி.

நாங்கள் எல்லோரும் இசையமைப்பாளர்கள் (மியூசிக் டைரக்டர்ஸ்)... ஆனால் அப்பா (இளையராஜா) ஒருவர்தான் மியூசிக் கம்போஸர்!

English summary
Top music director Yuvan Shankar Raja told that they all are music directors but his dad Ilayaraja is a true music composer.
Please Wait while comments are loading...