Don't Miss!
- News
திருக்குறளை கூட சலுகை என நினைத்து விட்டாரோ.. 'எந்த விதத்திலும் உதவாத பட்ஜெட்'.. தொல். திருமாவளவன்
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சண்டக்கோழி 2.. ‘காட்பாதர் படம் போல் வந்துள்ளது: விஷால் பெருமை
Recommended Video

சென்னை : சண்டக்கோழி 2 படம் காட்பாதர் படம் போல் உருவாகியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை சண்டக்கோழி 2 என்ற பெயரில் விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தையும் லிங்குசாமியே இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி , எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய விஷால், 'சண்டக்கோழி 2 திரைப்படம் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற காட்பாதர் படத்தை போல் உருவாகியுள்ளதாகக் கூறினார்.
மேலும், இது குறித்து அவர் பேசியதாவது:-

நண்பர்:
சண்டக்கோழி முதல் பாகம் எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் என்ற உரிமையில் அந்த படத்தில் நான் நடிக்கின்றேன் என்று கூறினேன்.

ஆக்சன் ஹீரோ:
அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்கு தொடங்கியதுதான் என் வாழ்க்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது.

பந்தைய கோழி:
தாவணி போட்ட தீபாவளி பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பிறமாநிலத்திலும் பந்தைய கோழி என்று வெளியிட்டார்கள். லிங்கு சாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம்.

அலைமோதிய கூட்டம்:
என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார். அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து அலை மோத ஆரம்பித்தனர்.

காட்பாதர் படம்:
அன்று முதல் 24படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன். அதுவும் சண்டை கோழியே 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது. சண்டக்கோழி 2 திரைப்படம் உலகப் புகழ்பெற்ற காட்பாதர் படம் போல் வந்துள்ளது என்பது பெருமையாக இருக்கிறது.

கிள்ளி பார்ப்பேன்:
நான் இயக்குநராக வரவேண்டும் என நினைத்தேன் என்னை ஹீரோவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. பிரபு சாருடனோ,ராஜ்கிரண் சாருடனோ நடிக்கும் போதும் பாலா சார் இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளி பார்ப்பேன். ஹீரோவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி.பிரபு சாருடனோ,ராஜ்கிரன் சாருடனோ நடிக்கும் போதும் பாலா சார் இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளி பார்ப்பேன்.

ஆயுத பூஜை:
சண்டக்கோழி -2, பந்தையகோழி-2 இரண்டுமே அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது.அதுவும் ஆயுத பூஜை அன்று.பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.