Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாப்பிள்ளை திருடனாகவே இருந்தாலும், திருமணத்தை நிறுத்தும் ஐடியா இல்லை!- இனியா
திருவனந்தபுரம்: வீட்டில் பணம் திருடிய காதலனுடன் நிச்சயமான தன் சகோதரி திருமணத்தை ரத்து செய்யும் எண்ணமில்லை என்று நடிகை இனியா கூறியுள்ளார்.
தமிழில் வாகை சூடவா, மவுன குரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. முன்னணி நடிகையாக உள்ள இவருக்கு சுவாதி என்ற அக்கா இருக்கிறார். இவர் மலையாளத்தில் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க் கடவு என்ற பகுதியில் வசிக்கின்றனர்.

சுவாதிக்கும் அதே ஊரை சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்தோடும் சமீபத்தில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
திடீரென ஒரு நாள் இரவு சுவாதி திருமணத்துக்காக வாங்கப்பட்ட நகைகளும், ரூ.5 லட்சம் ரொக்கப் பணமும் திருட்டு போனது.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையை நடத்தியவர் சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையான ஷாபின்தான் என்பது உறுதியானது. இதனால் இனியா குடும்பத்தினர் அதிர்ச்சியானார்கள். சுவாதிக்கும் ஷாபினுக்கும் நிச்சயமான திருமணம் ரத்தாகும் என கூறப்பட்டது.
ஆனால் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "என் சகோதரி திருமணத்தை நாங்கள் ரத்து செய்யவில்லை. அது மாதிரி எந்த திட்டமும் இல்லை. வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த விஷயம் குறித்து என் சகோதரியிடம் நான் பேசவில்லை.
ஷாபின் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்தான். அவரது குடும்பம் எங்களை விட வசதியானது. ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு ஷாபின் வந்தார். என் அக்காவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். என் பெற்றோர் ஷாபின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினர். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.
ஷாபினுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். தவறானவர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் இப்படி நடந்து கொண்டாரே என்னமோ.. எங்களைப் பொருத்தவரை உண்மையான குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்றுதான் நினைக்கிறோம், என்றார்.