twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீச்சல் தெரியாது: நீரில் மூழ்கி பலியாகும் முன்பு 2 கன்னட நடிகர்கள் பேட்டி

    By Siva
    |

    பெங்களூர்: தங்களுக்கு சரியாக நீச்சல் தெரியாது என படப்பிடிப்பின்போது நீரில் மூழ்கி பலியாகும் முன்பு கன்னட நடிகர்கள் உதய் மற்றும் அனில் தெரிவித்தார்கள்.

    துனியா விஜய் நடித்து வரும் மஸ்தி குடி கன்னட படப்பிடிப்பின் கிளைமாக்ஸ் காட்சி நேற்று மதியம் பெங்களூர் அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நடந்தது. விஜய், வில்லன்கள் உதய் மற்றும் அனில் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் அதுவும் 100 அடி உயரத்தில் இருந்து குதித்த காட்சி படமாக்கப்பட்டது.

    அப்போது விஜய் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். உதய் மற்றும் அனில் நீரில் மூழ்கி பலியாகினர்.

    அனில்

    அனில்

    நீரில் குதிக்கும் காட்சியில் நடிக்கும் முன்பு அனில் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், எனக்கு நீச்சல் சரியாக தெரியாது. முதல் முறையாக உயரத்தில் இருந்து குதிக்கிறேன். அதனால் என்ன நடக்குமோ என படப்படப்பாக உள்ளது என்றார்.

    கிணறு

    கிணறு

    எங்கள் ஊரில் உள்ள கிணற்றில் நீந்தியுள்ளேன். கண் மூடித் திறப்பதற்குள் கிணற்றின் மறுபக்கத்தை அடைந்துவிடலாம். ஆனால் ஏரி பற்றி தெரியவில்லை. ஏரியில் நீந்தியும் பழக்கம் இல்லை என்றார் அனில்.

    உதய்

    உதய்

    ஏரியில் குதிக்கும் காட்சிக்காக எதுவும் நாங்கள் பயிற்சி எடுக்கவில்லை. மாஸ்டர்கள் உள்ளார்கள். விஜய் இருக்கிறார். வந்திருக்கிறேன். நான், அனில் மற்றும் விஜய் ஏரியில் குதிக்கிறோம். மற்றவை கடவுளின் கையில் உள்ளது என்று உதய் பேட்டியளித்தார்.

    பயம்

    பயம்

    எனக்கு உயரம் என்றால் பயம். முதல் முறையாக உயரத்தில் இருந்து நீரில் குதிக்கிறேன். அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே பார்க்கவே பயப்படுவேன். கடவுள் காப்பாற்றுவார் என நினைக்கிறேன் என்று உதய் கூறினார்.

    English summary
    Udhay and Anil, who got drowned in Tippagondanahalli lake said that they didn't know swimming properly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X