»   »  ஃபெப்சி வேலை ஸ்ட்ரைக் செய்தாலும் தயாரிப்பாளர் சங்க முடிவில் மாற்றம் இல்லை!- விஷால்

ஃபெப்சி வேலை ஸ்ட்ரைக் செய்தாலும் தயாரிப்பாளர் சங்க முடிவில் மாற்றம் இல்லை!- விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெப்சி ஸ்ட்ரைக் அறிவித்தாலும், தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் மாற்றமில்லை. ஸ்ட்ரைக்கை மீறி படப்பிடிப்புகள் நடக்கும் என விஷால் அறிவித்துள்ளார். இதனால் திரைத்துறைக்குள் பெரும் மோதல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

திரைத் துறையில் தயாரிப்பாளர்கள் - தொழிலாளர்கள் மோதல் பெருமளவில் வெடித்துள்ளது. 25 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட ஃபெப்சி அமைப்பு இப்போது எவ்வளவோ இறங்கி வந்தாலும், தயாரிப்பாளர் தரப்பில் தொடர்ந்து பிடிவாதம் காட்டப்பட்டுகிறது.

இந்த நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினார். அதில்தான் ஸ்ட்ரைக் குறித்தும் அறிவித்திருந்தார்.

செல்வமணியின் இந்த ஸ்ட்ரைக் அறிவிப்புக்கு விஷால் அளித்துள்ள பதில்:

தற்போது நிலவி வரும் பிரச்சனைகள குறித்த தங்கள் கடிதம் ஊடகங்கள் மூலம் கிடைத்தது. அதில் உங்களது பக்க நிலைகளையும் நியாயங்களையும் விளக்கியிருந்தீர்கள். மேலும் தயாரிப்பாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து விருப்பம் தெரிவித்து எழுதியதும் மகிழ்ச்சி. எனினும் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது. இந்நிலையில் நாங்கள் வழக்கம்போல தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளோம். ஆகவே எங்கள் உறுப்பினர்களின் படப்பிடிப்பிற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என உங்கள் உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் நாங்கள் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிபந்தனை வேண்டாம்

நிபந்தனை வேண்டாம்

மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு ஒரு விஷயத்தினை தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொழிலாளர்கள் என்றைக்கும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. ஏனெனில், தொழிலாளர்கள் மூலமே பல திரைப்படங்கள் நல்ல முறையில் உருவாகி திரைதுறைக்கு பல நற்பலன்கள் கிடைத்துள்ளது. அவ்வகையில் நாங்கள் எந்த ஒரு நிலையிலும் ஃபெப்சியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை. ஆனால் பெப்சியுடன் மட்டும்தான் வேலை செய்யவேண்டும் என்பதை மட்டுமே மறுக்கிறோம். முந்தைய காலகட்ட சினிமாவில், தயாரிப்புத் தொழில் நன்றாக இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் தயாரிப்பு தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதே வேளையில் தயாரிப்பு தொழில் சார்ந்த மற்ற அனைத்து தொழில்களும் நன்றாக உள்ளதும் தாங்கள் நன்கு அறிந்ததே. இங்கு காலங்காலமாக முறையற்று வாங்கிவரும் பொது விதிகள் சார்ந்த சம்பளங்கள் சிலவற்றைத்தான் தற்போது முறைப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு முறையும் இதே வேலையாப் போச்சு

ஒவ்வொரு முறையும் இதே வேலையாப் போச்சு

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட சங்கம் பிரச்சனை எற்படுத்துவதும், அதில் தயாரிப்பாளர்கள் ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு, அதன் மூலம் பெப்சியே வேண்டாம் என்று முடிவு எடுப்பதும், பின்பு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு மீண்டும் உறவை தொடர்வது என்பதும் வாடிக்கையாக உள்ளது, ஆனால் இதே விசயம் ஆண்டாண்டு காலமாக திரும்ப திரும்ப நடப்பது வேடிக்கையாகவும் உள்ளது. இதில் தயாரிப்பாளர்கள் பக்க நியாயங்களை யாரும் இன்றுவரை சிந்தித்ததே இல்லை என்பது வருத்தத்திற்குரியது. ஆகவே நமக்கு இடையிலான உறவுக்கு என்றுமே அந்நிய சக்திகள் பங்கம் விளைவித்தது இல்லை என்பதையும், உங்களில் ஒரு அங்கமாக விளங்கும் டெக்னீஷியன் யூனியன் மட்டுமே என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம். மேலும் இந்த சங்கத்தின் தவறுகளுக்கு சாதகமாகவே சம்மேளனம் என்றும் இருப்பதை பார்க்கையில் ஒரு 40 ஆண்டுகால அமைப்பு சினிமா தொழிலுக்காகத் தான் தொழிலாளர்களே தவிர்த்து தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல என்பதை மறந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

டெக்னீஷியன் யூனியன்

டெக்னீஷியன் யூனியன்

25 ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட ஒரு அமைப்பை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி அவர்கள் நலன் காப்பது கடினம் என்பதை அறிந்த தங்களுக்கு 10,00,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் தயாரிப்பு தொழிலை செய்துவரும் தயாரிப்பாளர் நலன் காப்பது எவ்வளவு கடினம் என்பதை அதன் நிர்வாகக் குழுவில் அங்கமாகவும் இருந்த தங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்துவது தேவையற்றது என கருதுகிறோம். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியை குறிப்பிட்ட டெக்னீஷியன் யூனியனில் உள்ள தனபால் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்தது எங்களை பெரிதளவில் காயப்படுத்தியிருந்தாலும் சினிமா தொழிலின் தாய் ஸ்தானதில் உள்ள அமைப்பாக நாங்கள் இந்த விசயத்தை புறந்தள்ளுகிறோம். ஆனால் டெக்னீஷியன் யூனியன் எனும் அமைப்பு எல்லா காலகட்டத்திலும் தயாரிப்பு தொழிலுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்கிற அடிப்படையில் அந்த ஒரு அமைப்புடன் மட்டும் எங்களால் என்றைக்கும் தொழில் உறவை தொடர முடியாது. இது அவர் தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு தொழில் சார்ந்த அனைவரின் நலன் காக்க எடுத்த முடிவு ஆகும்.

வேண்டாம் என்று சொல்லவில்லை

வேண்டாம் என்று சொல்லவில்லை

இப்பவும் நாங்கள் தொழிலாளர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எங்களுக்கு என்றும் தொழிலாளர்கள் வேண்டும். பெப்சியுடன் இணைந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம்தான். ஆனால் டெக்னீஷியன் யூனியனுடன் முழுவதுமாக இனி இணைந்து செயல்பட முடியாது. மேலும் பில்லா பாண்டி தயாரிப்பாளருக்கு எற்பட்ட இழப்பை ஈடு செய்யும் பட்சத்தில் மற்ற சங்கங்கள் குறித்த சம்பள பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Producers Council President Vishal has announced that the producers would continue shootings and never bother about the strike announcement of FEFSI.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil