»   »  அந்த ரஜினியே எங்களுக்கு தேவை இல்லை: உடல் முழுவதும் பச்சை குத்திய ரஜினி வெறியர் கோபம்

அந்த ரஜினியே எங்களுக்கு தேவை இல்லை: உடல் முழுவதும் பச்சை குத்திய ரஜினி வெறியர் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியை சந்திக்க உடல் முழுவதும் ரஜினியின் உருவத்தை பதித்து வந்த ரசிகர்..!!- வீடியோ

சென்னை: அந்த ரஜினியே தேவையில்லை என்று ரஜினி ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து தனது ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். செவ்வாய்க்கிழமையில் இருந்து மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரசிகர்கள் யாரும் தனது காலில் விழ வேண்டாம் என்றும், பெரியோர், பெற்றோர் காலில் மட்டும் விழுங்கள் என்றும் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெறியர்

வெறியர்

மாற்றுத்திறனாளியான ரஜினி வெறியர் ஒருவர் தனது உடலில் ரஜினி பெயரை பச்சை குத்தியுள்ளார். கையை கிழித்து ரஜினி பெயரை எழுதியுள்ளார். அவரது கையை பார்க்கவே பயங்கரமாக உள்ளது. ரஜினி மீது பாசம் வைக்கலாம் அதற்காக இப்படியா உடலை வருத்திக் கொள்வது? யோசிங்க மக்களே யோசிங்க.

தேவையில்லை

தேவையில்லை

பச்சை குத்தியதை அழித்துவிட்டு வரச் சொல்கிறார் அப்படிப்பட்ட ரஜினியே எனக்கு தேவையில்லை. ரஜினிக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் அந்த ரசிகர்.

அதிமுக

அதிமுக

இன்று காலையில் திமுகவில் இருப்பவர் நாளை அதிமுகவுக்கு சென்றுவிடுகிறார். எங்களை மாதிரி பச்சை குத்திருப்பானா? அவருக்காக போராடிக் கொண்டிருக்கும் எங்களை போன்றவரை அழைத்து அவர் அரசியல் பேச வேண்டும் என்று அந்த ரஜினி ரசிகர் தெரிவித்துள்ளார்.

சூட்கேஸ்

சூட்கேஸ்

பெரிய பெரிய ஆளை கூப்பிட்டு பேசுகிறார், புகைப்படம் எடுக்கிறார். அவங்க சுட்கேஸ் கொடுத்து சீட் வாங்கிடுவாங்க. நான் உடல் ஊனமுற்றவன். எங்களை மாதிரி ரசிகர்களை அழைத்து அல்லவா அவர் பேச வேண்டும் என்று அந்த ரஜினி ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
A die hard fan of Rajinikanth has tattooed his thalaivar's image all over his body. Rajini has asked him to remove those tattoos. He is angry with Rajini for not having discussion with die hard fans like him about his political entry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X