»   »  தனுஷுக்கும், எனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது, ஆனால்...: சவுந்தர்யா

தனுஷுக்கும், எனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது, ஆனால்...: சவுந்தர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 படத்தில் வேலை செய்தபோது தனக்கும், தனுஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சவுந்தர்யா தனது தந்தை ரஜினிகாந்தை இயக்கியுள்ளார். தற்போது அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது,

நண்பர்கள்

நண்பர்கள்

நானும், தனுஷும் நல்ல நண்பர்கள். விஐபி 2 படக்கதையை உருவாக்கிய பிறகு எப்பொழுது பார்த்தாலும் அது பற்றியே ஆலோசித்துக் கொண்டிருந்தோம்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

விஐபி 2 பட விஷயத்தில் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் அதை பேசித் தீர்த்துக் கொண்டோம். வேலை விஷயத்தில் தனுஷ் எனக்கு பெரிதும் உதவி செய்தார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் திரைத்துறையில் அனுபவசாலி என்பதால் அவர் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். திரைக்கதை விஷயத்தில் அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்.

ரஜினி

ரஜினி

அப்பா ரஜினி, தனுஷ் இருவரையும் இயக்குவது எளிது தான். கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் அவர்கள் சீரியஸாகிவிடுவார்கள். வேலை என்கிறபோது மகள் என்றோ, மச்சினி என்றோ அவர்கள் பார்ப்பது இல்லை என்றார் சவுந்தர்யா.

English summary
Director Soundarya Rajinikanth said that she and Dhanush had misunderstanding while working in VIP 2 movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil