twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘கோச்சடையான்’ ரஜினி ரசிகர்களை நிச்சயம் திருப்தி படுத்தும்... சவுந்தர்யா நம்பிக்கை

    |

    மும்பை: கோச்சடையானில் நவீன தொழில்நுட்பம் பயன் படுத்தப் பட்டிருந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் ரஜினிகாந்த் பாணியிலேயே கதை இருக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் அப்படத்தின் இயக்குனரும், ரஜினியின் இளைய மகளுமான சவுந்தர்யா.

    ரஜினியின் 3டி படமான கோச்சடையானைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். சம்மர் ஸ்பெஷலாக அப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ரஜினியின் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சவுந்தர்யா. அப்போது கோச்சடையான் படம் குறித்து தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

    தனது தந்தையும், சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த் குறித்து சவுந்தர்யா கூறியதாவது :-

    ‘கோச்ச்டையான்’ கதைக்காக தான்...

    ‘கோச்ச்டையான்’ கதைக்காக தான்...

    கோச்சடையான் படத்தில் நடிக்க கதையை பார்த்து தான் எனது தந்தை ஒப்புக் கொண்டார். அவரது மகளான நான் இயக்கும் காரணத்திற்காக அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படத்தில் நல்ல கதை இருந்தது.

    உயர் தொழில்நுட்பம்...

    உயர் தொழில்நுட்பம்...

    இந்த படம் உயர் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. ஹாலிவுட் படங்களில் தான் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கதைக்கு தொழில்நுட்பம் தேவைப்பட்டது. இதுபற்றி எனது தந்தையிடம் எடுத்து கூறினோம். அதன்பிறகே அவர் ஏற்றுக் கொண்டார்.

    அப்பாவின் சம்மதம்....

    அப்பாவின் சம்மதம்....

    இந்த படத்தை என்னால் கையாள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இதனால் படத்தை தொடருமாறு எனது தந்தை கூறினார்.

    கடவுள் கிருபையால்...

    கடவுள் கிருபையால்...

    இதுபோன்ற படங்களை எடுக்க 5 முதல் 6 ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் குறிக்கோளுடன் செயல்பட்டதாலும், கடவுளின் உதவியாலும் 2 வருடத்துக்குள் படத்தை எடுத்து முடித்து உள்ளோம்.

    வர்த்தகரீதியான படம்...

    வர்த்தகரீதியான படம்...

    இது ஒரு வர்த்தக ரீதியான படம். அதேபோல புதிய தொழில்நுட்பம் கொண்ட படம். ஆனால் ரஜினிகாந்த் படத்தில் கதை எப்படி இருக்குமோ, அதே பாணியிலேயே கதை இருக்கும். படத்தில் எனது தந்தையின் கதாபாத்திரம் பற்றி விவரிக்க முடியாது.

    ராணா படம்...

    ராணா படம்...

    ராணா படத்தை தொடங்கும் வேளையில் துரதிருஷ்டவசமாக எனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் நலமடைந்தார். மீண்டும் அந்த படத்தை தொடங்க நினைத்தபோது, அந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு அதிக உடல் உழைப்பு தேவைப்பட்டது. இதனால் அந்த சூழ்நிலையில் படத்தை தொடர்வதை கைவிட்டோம்.

    ராணாவின் அப்பா தான் கோச்சடையான்...

    ராணாவின் அப்பா தான் கோச்சடையான்...

    அந்த ‘ராணா'வின் தந்தை தான் கோச்சடையான். ‘ராணா'வுக்காக ஏற்கனவே கதையை எழுதி விட்டோம். அதன் கதை தயாராக உள்ளது. எனது தந்தைக்காக அந்த படத்தை குறைந்த உடல் உழைப்புடன் எடுக்க விரும்புகிறோம்.

    ‘ராணா’ புதிய கதை...

    ‘ராணா’ புதிய கதை...

    இதனால் படத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அதிக உடல் வலுவை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ராணா படத்தின் கதை ஒரு புதிய கதை. தொழில்நுட்பத்தை புகுத்தி படத்தை எடுப்பதை எனது தந்தை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்' என இவ்வாறு சவுந்தர்யா தெரிவித்தார்.

    பஞ்ச் பேசும் தலைவரின் பன்சுவாலிட்டி.....

    பஞ்ச் பேசும் தலைவரின் பன்சுவாலிட்டி.....

    மேலும், படப்பிடிப்பு தளத்தில் ரஜினியின் நேரந்தவறாமையைப் பார்த்து வியந்து போனதாக கூறியுள்ளார் சவுந்தர்யா.

    English summary
    Soundarya, who has a clear idea about what fans expect from her father on the screen, said “Kochadaiiyaan” has all the commercial elements that will excite viewers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X