»   »  நடிகர் தனுஷ் எங்கள் மகனே, ஆதாரங்கள் வைத்திருக்கிறோம்: திருப்புவனம் தம்பதி

நடிகர் தனுஷ் எங்கள் மகனே, ஆதாரங்கள் வைத்திருக்கிறோம்: திருப்புவனம் தம்பதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

தனுஷ் தங்களின் மகன் என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனைக்கும் தயார் என்றனர். ஆனால் அவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனுஷ் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் கதிரேசன், மீனாட்சி தம்பதியிடம் பதில் கேட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்த தம்பதி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

தனுஷ்

தனுஷ்

எந்தவித ஆதாரமும், ஆவணங்களும் இல்லாமல் இந்த வழக்கை நடிகர் தனுஷ் தாக்கல் செய்துள்ளார். அவர் எங்கள் மகன் இல்லை என்றும், தான் ஒரு முன்னணி நடிகர் என்றும் கூறியிருக்கிறார்.

பொய்

பொய்

சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவர் பிறந்ததாகவும், சாலிக்கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்ததாகவும், தனது இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும் அவர் கூறியிருப்பது, பொய்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

அவர் எங்களுடைய மகன் தான் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. உறவினர்களும் வாக்குமூலம் கொடுக்க தயாராக உள்ளார்கள். அவருடைய சிறுவயது நண்பர்களும் சாட்சி சொல்வார்கள். எழும்பூர் ஆஸ்பத்திரியில் பிறந்ததாக அவர் தாக்கல் செய்துள்ள பிறப்புச் சான்றிதழ் பொய்யானது.

படிப்பு

படிப்பு

அவரை நாங்கள் இங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தோம். பின்னர் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை-சீதையம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்த்தோம். அங்கு விடுதியில் தங்கியிருந்து ஒரு மாதம் மட்டும் படித்த அவர், பின்னர் சென்னைக்கு சென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அப்போது நாங்கள் தான் அவருடைய உண்மையான பெற்றோர் என்று தனுஷே பத்திரிகைகளில் பேட்டி கொடுத்துள்ளார்.

வழக்கு

வழக்கு

எங்களுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாததால் தான் பராமரிப்புத் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தோம். எனவே எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கவும், அவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என அந்த தம்பதி தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Thiruppuvanam couple submitted a petition in Melur court saying that they can prove that actor Dhanush is their son.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil