twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவரோட ஹேர் ஸ்டைல் பார்த்துதான் செலக்ட் செய்தோம்.. கதிர் கூறும் காதலர் தினம் சீக்ரெட்!

    |

    சென்னை: 1991 ஆம் ஆண்டு நடிகர் முரளி ஹீரா இணைந்து நடித்த திரைப்படம் இதயம். இப்படத்தை எழுதி, இயக்கியவர் கதிர்.

    இயக்குநர் கதிர் இயக்கிய முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் ஆனதும், உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என்று பல படங்களை இயக்கினார்.

    இவர் இயக்கி சூப்பர் ஹிட் ஆன காதலர் தினம் படத்தின் நாயகன் குணால் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

     ஒரே ஒரு கண்டிஷன் தான்.. அதுக்கு ஃபுல் ஃப்ரீடம் தந்த உச்ச நடிகர்.. டக்குன்னு ரெடியான ஸ்க்ரிப்ட்! ஒரே ஒரு கண்டிஷன் தான்.. அதுக்கு ஃபுல் ஃப்ரீடம் தந்த உச்ச நடிகர்.. டக்குன்னு ரெடியான ஸ்க்ரிப்ட்!

     இதயம் முரளி

    இதயம் முரளி

    நடிகர் முரளி, ஹீரா இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான படம் தான் இதயம். இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இப்படத்தில் சின்னி ஜெயன்த், ஜனகராஜ், மனோரமா, விஜயகுமார் போன்ற பலரும் நடித்திருந்தனர். இயக்குநர் கதிருக்கு இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் படம் ஆகவே அமைந்தது. அதுக்குப் பிறகு இவர் இயக்கிய படம் தான் உழவன் இப்படத்தில் பிரபு மற்றும் பானுப்பிரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

     90களின் சிறந்த படங்கள்

    90களின் சிறந்த படங்கள்

    1996 ஆம் ஆண்டில் இவர் இயக்கிய காதல் தேசம் திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. காதல் தேசம் படத்தில் வினித், அப்பாஸ், தபு போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம், ஸ்ரீவித்யா, வடிவேலு, போன்ற பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைத்தார் ஏ ஆர் ரகுமான். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. கதிர் இயக்கிய அனைத்து படங்களும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வந்தனர்.

     3 வருடம் கழித்து

    3 வருடம் கழித்து

    காதல் தேசம் படத்திற்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து இவர் இயக்கிய படம் தான் காதலர் தினம். 90களில் சூப்பர் ஹிட் படங்கள் ஒன்றாக இப்படம் அமைந்தது. இப்படத்தில் குணால், சோனாலி பிந்ரே போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் நாயகனாக குணாலுக்கு இதுவே அறிமுக படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு குணால் பார்வை ஒன்றே போதுமே, புன்னகை தேசம், வருஷமெல்லாம் வசந்தம்,போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார்.

     அதிர்ச்சி சம்பவம்

    அதிர்ச்சி சம்பவம்

    கடைசியாக இவர் நண்பனின் காதலி என்ற படத்தில் நடித்திருந்தார். 2கே கிட்ஸ்சின் ஃபேவெரெட் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் குணால், 2008 ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை ஆண்டுகள் கழித்து, காதலர் தினம் படத்தின் இயக்குநரான கதிர் நடிகர் குணாலுக்கு அந்த படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பற்றி கூறியுள்ளார்.

     திடீரென்று கிடைத்த வாய்ப்பு

    திடீரென்று கிடைத்த வாய்ப்பு

    இது குறித்து இயக்குநர் கதிர் கூறுகையில், "காதலர் தினம் படத்திற்காக ஒரு புதுமுக நடிகரை தேடிக்கொண்டிருக்கும் பொழுது, ரோட்டில் குணால் நடந்து செல்வதை நான் பார்த்தேன், அவரது ஹேர் ஸ்டைல் மஷ்ரூம் கட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பொழுது அந்த மஷ்ரூம் மிகவும் பிரபலமானது. ஆனால் பார்ப்பது மிகவும் டிமாண்ட். அந்த ஹேர் ஸ்டைலில் அவரைப் பார்த்தவுடன் இந்த கதைக்கு அவர் சரியாக இருப்பார் என்று எனக்கு தோன்றியது. உடனே என் அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு அவரை அழைத்து வரும்படி சொன்னேன். அப்படி நடிக்க வந்தவர் தான் நடிகர் குணால் . காதலர் தினம் படத்தில் அவரது ஹேர் ஸ்டைலும் அவரது முக ஜாடையும் கச்சிதமாக பொருந்தியது. அதன் பிறகு அவரை படத்தில் நடிக்க நாங்கள் ஒப்பந்தம் செய்தோம் என்று கூறியுள்ளார். இந்த படம் வெளிவந்த சமயத்தில் அவர்கள் ஹேர் ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    We have selected Gunal As a actor after seeing his hair style says Director kathir
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X