twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேரக் கட்டாயம்' நடிகர் ராஜ்கிரண் பொங்கல் வாழ்த்து!

    By
    |

    சென்னை: நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரக் கட்டாயத்தில் இருக்கிறோம் என்று நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார்.

    கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படம் ஹீரோவாக அறிமுகமானவர் ராஜ்கிரண்.

    தொடர்ந்து படங்களை இயக்கிய அவர், படங்களைத் தயாரிக்கவும் செய்தார். இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

    கே.ஜி.எஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபல ஹீரோ!கே.ஜி.எஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபல ஹீரோ!

    அந்நிய கார்ப்பரேட்

    அந்நிய கார்ப்பரேட்

    அதில் அவர் கூறியிருப்பதாவது: நம் இந்திய நாடு, விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. சுதந்திரத்துக்குப் பின், நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களை கொள்ளையடித்ததோடு, நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்.

    தவித்து நிற்கின்றனர்

    தவித்து நிற்கின்றனர்

    அதன் காரணமாக, இன்று நம் விவசாயப் பெருமக்கள், வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு,தற்கொலையும் பண்ணிக் கொள்கிறார்கள். விவசாயத் தொழிலை ஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப் பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இது போக, விவசாயம் பொய்த்துப் போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர்.

    கடைசி நேர கட்டாயம்

    கடைசி நேர கட்டாயம்

    நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேர கட்டாயத்தில் இருக்கிறோம். நம்மாழ்வார் ஐயா அவர்கள், காட்டிச்சென்ற வழியைப் பின்பற்றி, இயற்கை விவசாயத்துக்கு மாறி, நம் மண்ணை உயிர்ப்பித்து, பயிர் செய்து, மதிப்புக் கூட்டு முறையில் வருமானத்தைப் பெருக்கி, விவசாய பெருமக்கள் தலை நிமிர்ந்து மகிழ்ச்சியோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கிறேன்.

    கிடைத்த பொக்கிஷம்

    கிடைத்த பொக்கிஷம்

    ஒவ்வொரு அடி, மண்ணும், அதனுள் இருக்கும் கனிம வளங்களும், நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். அவற்றை நம் சந்ததியினருக்காக பேணிப் பாதுகாக்க, இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் என் மனம் கனிந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள். இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.

    English summary
    Actor Rajkiran has said in his Pongal message that we have to make a commitment to protect our agriculture.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X