»   »  புதுமுக இயக்குனர்களை பார்த்தாலே தெறித்து ஓடுவோம்: பிரபல நடிகர் பேட்டி

புதுமுக இயக்குனர்களை பார்த்தாலே தெறித்து ஓடுவோம்: பிரபல நடிகர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: முன்பெல்லாம் புதுமுக இயக்குனர்கள் என்றாலே தெறித்து ஓடுவோம் என்று நடிகர் மனோஜ் கே. ஜெயன் தெரிவித்துள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் மனோஜ் கே. ஜெயன். நடிகை ஊர்வசியின் முன்னாள் கணவர். தற்போது அவர் மலையாள படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார்.

இந்நிலையில் சினிமா குறித்து அவர் கூறும்போது,

இயக்குனர்

இயக்குனர்

என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வது இல்லை. முன்பெல்லாம் இயக்குனர் புதுமுகம் என்றால் தெறித்து ஓடுவோம். ஆனால் தற்போது அப்படி இல்லை.

அறிவாளிகள்

அறிவாளிகள்

முன்பு சத்யன், கமல், ஜெயராஜ், ஜோஷி போன்றவர்களின் படங்களில் தான் நடிப்போம். ஆனால் தற்போது புதுமுக இயக்குனர்கள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர்.

ஆர்வம்

ஆர்வம்

தற்போது இயக்குனர் புதுமுகமாக இருந்தால் அவர் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஏனென்றால் அவர்கள் படங்களை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு சினிமா துறைக்கு வருகிறார்கள்.

ஹீரோ

ஹீரோ

நான் ஹீரோவாக நடித்துள்ளேன். அதன் பிறகு வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் துவங்கினேன். இந்த மாற்றம் அதுவாக நடந்தது. என் சினிமா பயணம் சவுகரியமாக உள்ளது. ஹீரோவாக நடிக்க நான் தயாராக இல்லை என்றார் மனோஜ்.

English summary
Actor Manoj K. Jayan said we used to run earlier if we hear the director as a new comer but not any more.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil