»   »  புலி படத்தால் ஏகப்பட்ட நஷ்டம், கொஞ்சம் கேளுங்க: ஸ்ரீதேவிக்கு எஸ்கேடி ஸ்டுடியோஸ் கோரிக்கை

புலி படத்தால் ஏகப்பட்ட நஷ்டம், கொஞ்சம் கேளுங்க: ஸ்ரீதேவிக்கு எஸ்கேடி ஸ்டுடியோஸ் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தால் ஏகப்பட்ட நஷ்டம் என்றும், அதனால் கூடுதல் சம்பளத்தை கேட்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் ஸ்ரீதேவிக்கு தயாரிப்பு நிறுவனமான எஸ்கேடி ஸ்டுடியோஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

புலி படத்தில் தான் நடித்தற்காக பேசப்பட்ட சம்பளத்தில் ரூ.50 லட்சம் பாக்கியை தரவில்லை என்று கூறி தயாரிப்பாளர்கள் ஷிபு தமீன்ஸ், செல்வகுமார் ஆகியோர் மீது நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்நிலையில் இது குறித்து புலி பட தயாரிப்பு நிறுவனமான எஸ்கேடி ஸ்டுடியோஸ் கூறியிருப்பதாவது,


ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

புலி படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசினோம்(ரூ.2.7 கோடி மற்றும் ரூ.30 லட்சம் சேவை வரி). பட வேலைகள் முடியும் தருவாயில் அதை தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்தால் மேலும் சில கோடிகள் வேண்டும் என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கேட்டார்.


விஜய்

விஜய்

டப்பிங்கிற்கான உரிமை எல்லாம் தயாரிப்பாளர்களிடம் மட்டும் தான் உள்ளது. விஜய், சுதீப், ஸ்ருதி என யாரும் எங்களிடம் இப்படி கேட்கவில்லை. ஆனால் போனி கபூர் அதை எல்லாம் கேட்காமல் கூடுதல் பணம் அளித்தால் தான் ஸ்ரீதேவியை நடிக்க அனுப்புவேன் என்றார்.


போனி கபூர்

போனி கபூர்

பெரிய செட்கள் போட்டு பிற நடிகர், நடிகைகள் காத்திருந்ததால் நாங்கள் தெலுங்கு டப்பிங்கிற்கு போனி கபூருக்கு ரூ.15 லட்சமும், இந்தி டப்பிங்கின் சாட்டிலைட் உரிமத்தின் 20 சதவீதத்தையும் அளிக்க ஒப்புக் கொண்டோம். நாங்கள் வழக்கமாக இவ்வாறு செய்தது இல்லை.


ரூ.55 லட்சம்

ரூ.55 லட்சம்

இந்தி டப்பிங் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை மனிஷ் என்பவருக்கு விற்றோம். அவரிடம் இருந்து போனி ரூ.55 லட்சம் பெற்றார். ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்கையில் அவருக்கு நாங்கள் அளிப்பதாக கூறிய சம்பளத்தை அளித்துவிட்டோம்.


எவ்வளவு செலவு

எவ்வளவு செலவு

ஸ்ரீதேவிக்கு என பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர், மார்க்கெட்டிங் டிசைனர் என ஏகப்பட்ட செலவு செய்தோம். அவர் புலி படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பட அறிமுக விழாக்களுக்கு வராதது கவலையான விஷயம்.


நஷ்டம்

நஷ்டம்

புலி படத்தால் பல பக்கத்தில் இருந்தும் எங்களுக்கு நஷ்டம். மேலும் எங்கள் வீடுகளில் நடந்த வருமான வரிசோதனை பிரச்சனை வேறு. அதனால் இதை எல்லாம் மனதில் வைத்து கூடுதல் பணத்தை கேட்காமல் இருக்குமாறு ஸ்ரீதேவி தரப்பை கேட்டுக் கொள்கிறோம். அதே சமயம் அவருக்கு நாங்கள் அளிப்பதாக கூறிய சம்பளத்தை கொடுத்துவிட்டோம் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.


English summary
Puli production company SKT studios said that they have incurred losses on many front and asked Sri Devi not to ask for extra money.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil