வெளிவர காத்திருக்கும் வெப்சீரிஸ்.. புதிய ட்ரெண்டுக்கு மாறும் தமிழ் சினிமா!
சென்னை: திரையரங்கு கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது OTT கலாச்சாரம் இந்த கொரோனா தொற்று காலத்தில் தமிழ் சினிமாவில் தலை தூக்கியுள்ளது.
OTT மூலமாக திரைப்படங்களை தவிர்த்து தற்போது வெப் தொடர்களும் தமிழ் சினிமாவில் பரவலாக வர தொடங்கியுள்ளது. இப்படி சில வகையில் OTT தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது.
நவம்பர் ஸ்டோரி, லைவ் டெலிகாஸ்ட், நவரசா, ஒரு குட்டி லவ் ஸ்டோரி, விக்டிம் என OTT யில் வெளிவர தமிழ் வெப் தொடர்கள் வரிசை கட்டி காத்துள்ளது.

நவம்பர் ஸ்டோரி
இந்திரா சுப்ரமணியன் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளிவர உள்ள த்ரில்லர் வெப் தொடர் தான் நவம்பர் ஸ்டோரி. சமீபத்தில் இந்த தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. நவம்பர் ஸ்டோரி நேரடியாக ஹாட் ஸ்டார் தளத்தில் வெளிவர உள்ளது. இந்திரா சுப்ரமணியன் இயக்குனர் ராம் குமாரின் ராட்சசன் படத்தில் துணை இயக்குனராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டெலீகாஸ்ட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி நடிப்பில் ஹாட் ஸ்டாரில் வெளிவர உள்ள வெப் தொடர் லைவ் டெலீகாஸ்ட். ஹாரர் கதைகளமாக உருவாகி உள்ள இந்த வெப் தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.

படப்பிடிப்பில் நவரசா
இயக்குனர் மணி ரத்னம் தயாரிப்பில் Netflix ல் வெளிவர உள்ள வெப் தொடர் நவரசா. இது 9 கதைகளை கொண்ட தொடராகும். K.V. ஆனந்த, கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ஹலீதா ஷமீம், அரவிந்த் சாமி, பொன்ராம், பெஜோய் நம்பியார், ரதிந்திரன் பிரசாத் என 9 இயக்குனர்களை கொண்டு இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, நித்யா மேனன், பார்வதி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அசோக் செல்வன், கவுதம் கார்த்திக், பாபி சிம்ஹா என மிக பெரிய நடிகர்களின் பட்டாளமும் உள்ளது.

காத்திருக்கும் அறிவிப்புகள்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கவுதம் மேனன், விஜய், நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கத்தில் ஒரு குட்டி லவ் ஸ்டோரி வெப் தொடர் வெளியாக உள்ளதாக இது வரை ஒரு ப்ரோமோ வீடியோ மட்டும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதை போலவே விக்டிம் வெப் தொடரை சிம்பு தேவன்,
பா. ரஞ்சித், வெங்கட் பிரபு, ராஜேஷ் ஆகியோர் இயக்க உள்ளனர் என்ற செய்தி மட்டுமே தற்போது வரையில் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











