»   »  பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்.. கேரள இசைக்கலைஞரை மணக்கிறார் !

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்.. கேரள இசைக்கலைஞரை மணக்கிறார் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல காயத்ரிவீணை இசைக்கலைஞரும், பாடகியுமான வைக்கம் விஜயலட்சுமிக்கும், கோழிக்கோட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக்கலைஞருக்கும், வரும் மார்ச் மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

கடந்த 2013ல் பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான செல்லுலாய்டு என்னும் மலையாடப்படத்தின் வழியாக திரையுலகிற்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி, பார்வைக் குறைபாடுடையவரான விஜயலட்சுமி, தனது அசாத்திய பாட்டுத் திறனால் ரசிகர்களால் புகழப்படுபவர். இயக்குநர் ராஜமெளலியின் "பாகுபலி" உட்பட 30 படங்களுக்கும் மேலாக பாடல்களைப் பாடியுள்ளார்.

 Wedding bells for singer Vaikom Vijayalakshmi

தற்போது விக்ரம் பிரவு நடிப்பில் வெளியாக உள்ள வீரசிவாஜி படத்தில் "சொப்பண சுந்தரி" பாடலையும் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜயலட்சுமியின் வாழ்வில் புதியதோர் வசந்தமாக திருமண வாழ்வு அடிஎடுத்து வைக்க உள்ளார்.

விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தமும், அடுத்த வருடம் மார்ச் மாதம் திருமணமும் நடக்கவிருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக்கலைஞருடன், டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி நிச்சயதார்த்தமும், அடுத்த வருடம் மார்ச் 29-ஆம் தேதி திருமணமும் நடக்கவிருக்கிறது.

English summary
Popular singer Vaikom Vijayalakshmi is getting married to Santhosh on March 29 th 2017

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil