»   »  எல்லாருக்கும் வணக்கம்.. நாங்க மறுபடியும் வர்றோம்.. "சரவணன் மீனாட்சி" தரும் குட்நியூஸ்!

எல்லாருக்கும் வணக்கம்.. நாங்க மறுபடியும் வர்றோம்.. "சரவணன் மீனாட்சி" தரும் குட்நியூஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய சரவணன் மீனாட்சியைப் பார்த்து சந்தோஷித்த ரசிகர்களை ரொம்பவே நோகடித்து வெறுப்படித்துக் கொண்டிருக்கிறது புதிய சரவணன் மீனாட்சி. இந்தக் கொடுமையிலிருந்து ரசிகர்களுக்குத் தப்ப ஒரு வாய்ப்பு ஓடோடி வந்துள்ளது.

எஸ்.. ஒரிஜினல் சரவணன் மீனாட்சி மீண்டும் சின்னத் திரைக்கு திரும்பி வருகிறார்களாம்.. யார் சொன்னது?... அட அவங்களேதான் சொல்லியிருக்காங்கப்பா.

பல தொடர்கள் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை பெற்று முன்னிலையில் இருந்த விஜய் டிவி தன் ரசிகர்களின் பொறுமையை சோதித்து, கடுப்பேத்த ஆரம்பித்தது, தற்போது விடாமல் ஓடிகொண்டிருக்கும் சரவணன் மீனாட்சியால் தான். சரவணன் மீனாட்சியின் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடியாக நடித்திருந்தனர்.

Welcome back Saravananan meenatchi..!

இளைஞர்களையும் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட அனைவரையும் கட்டிபோட்ட தொடர் என்றே கூறலாம், சரவணன் மீனாட்சியை... முதல் பாகம் நிறைவுற்றதும், செந்தில் மற்றும் ஸ்ரீஜா திருமணம் செய்துகொண்டு சீரியலை விட்டு ஒதுங்கி இருந்தனர்.

தற்போது இரண்டாம் பாகத்தில் சரவணன் என்ற பெயரில் பல சரவணன்கள் வந்து போனார்கள். இறுதியில் வேட்டையனாக வரும் கவினின் சரவணபெருமாள் பெயரிலும் சரவணன் உள்ளது என்று வேட்டையனையே சரவணனாக மாற்றி விட்டனர். இதனால் கடுப்பாகிப் போனது ரசிகர் பட்டாளம்.

தற்போது யாரு வந்தா என்ன? வரலனா என்ன? தயவு செய்து சீரியலை சீக்கிரம் முடிங்க பாஸ் என்ற அளவுக்கு கொலைவெறியாகிக் கிடக்கின்றனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு சந்தோஷச் செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது சின்னத்திரையினை விட்டு ஒதுங்கி இருந்த ஜோடிகள் ஸ்ரீஜா மற்றும் செந்தில் இருவரும் ஜோடியாக மீண்டும் சின்ன திரைக்கு வரவிருக்கிறோம் என்று முகபுத்தகத்தில், பதிவிட்டுள்ளனர்.

இந்த ஜோடி மீண்டும் திரைக்கு ஜோடியாக வருவதால், சீக்கிரம் இந்த சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்துவிடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது பலிக்குமா அல்லது பல்பு வாங்குமா என்றுதான் தெரியவில்லை.

ஒரிஜினல் சரவணன்- மீனாட்சி அதே தொடரில் மீண்டும் காட்சி தருவார்களா அல்லது வேறு தொடரில் அருள் பாலிக்கப் போகிறார்களா என்பது அந்த மதுரை மீனாட்சிக்குத்தான் தெரியும்...!

எதுவா இருந்தா என்ன நல்லா இருந்தா சரி... நல்லது நடந்தா சரி.. வெல்கம் பேக் சரவணன் மீனாட்சி...!

English summary
The Famous Couple Saravanan Meenatchi Fame Senthil and Sreeja Will Come back soon in Television. This announcement was posted On Mirchi Senthil's Official Timeline.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil