twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிழல் நிஜமானது.. மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை!

    மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு ஆலோசகராக இருந்துள்ளார் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் தந்தை.

    |

    சென்னை: பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனின் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமான் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்துக்கு ரோல் மாடலாக, ஆலோசகராக இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த படம் காற்று வெளியிடை. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் இந்திய விமானப் படை விமானியின் வாழ்க்கையைப் பற்றி பேசிய படம் அது. அப்படத்திற்காக மணிரத்னத்திற்கு ஆலோசகராக இருந்தவர் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்த்தமான்.

    அதோடு அப்படம் உருவாக மணிரத்னத்திற்கு அவர் ரோல் மாடலாகவும் இருந்துள்ளார். இதனை காற்று வெளியிடை ஆடியோ வெளியீட்டு விழாவில் மணிரத்னமே பேசியுள்ளார்.

    வலிமையான வழிகாட்டி:

    வலிமையான வழிகாட்டி:

    அந்த விழாவில் அவர், "ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்த்தமான் எங்களுக்கு மிகவும் வலிமையான வழிகாட்டியாக இருந்தார். இந்திய விமானப்படை பற்றி பல முக்கியமான தகவல்களை அவர் எங்களுக்குத் தந்தார். எங்களுக்கு அவர் சிறந்த ஊக்கமாக இருந்தார்" என அபினந்தனின் தந்தையைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

    உயர் விருதுகள்:

    உயர் விருதுகள்:

    தமிழகத்தைச் சேர்ந்தவரான சிம்மக்குட்டி வர்த்தமான் பரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தை வென்றவர். இது தவிர ஆதி விசிஷ்ட் சேவா விருது, விஷிஷ்ட் சேவா போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

    அபிநந்தன்:

    அபிநந்தன்:

    இந்நிலையில், தற்போது மணிரத்னத்தின் படம் நிஜமானது போல, சிம்மக்குட்டி வர்த்தமானின் மகனான விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முற்பட்டது.

    விபத்து:

    விபத்து:

    அதனை இந்திய வீரர்கள் முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதில், அந்த விமானத்தில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ளார்.

    மத்திய அரசு தீவிரம்:

    மத்திய அரசு தீவிரம்:

    அவரை பத்திரமாக மீட்பதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அபிநந்தன் பத்திரமாக இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என இந்திய மக்களும் தீவிரமாக பிரார்த்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா?: யாஷிகாவை விளாசிய நெட்டிசன்கள்இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா?: யாஷிகாவை விளாசிய நெட்டிசன்கள்

    English summary
    Wg Cdr Abhinandan Varthaman father was the consultant for Mani Ratnam's Kaatru Veliyidai film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X