Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர்களை செதுக்கும் சிற்பி... அவர்கிட்ட வேலை செஞ்சது பாக்கியம்... அருண் விஜய் பாராட்டு
சென்னை : நடிகர் அருண் விஜய் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் தியாகு என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
இன்ஸ்டாவில்
கலக்கு
வரும்
யுவன்
சங்கர்
ராஜா
!
இந்நிலையில் மணிரத்னம் போன்ற ஜாம்பவானின் இயக்கத்தில் நடித்தது தனது பாக்கியம் என்று அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்கள்
நடிகர் அருண் விஜய் முக்கியமான மற்றும் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இவரது தேர்வாக உள்ளது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில காட்சிகளில் அஜித்திற்கே சவால் விடும் வகையில் இவரது நடிப்பு காணப்பட்டது.

சிறப்பான அருண் விஜய்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். கேங்ஸ்டர் படமான இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி உள்ளிட்டவர்களும் முக்கியமான ரோல்களில் நடித்திருந்த நிலையில் அருண் விஜய்யின் தியாகு கேரக்டர் மிகுந்த வரவேற்புக்கு உள்ளானது.

மணிரத்னம் குறித்து பாராட்டு
இந்நிலையில் அவரது சினம் பர்ஸ்ட் லுக் வெளியீட்டையொட்டி வந்திருந்த இயக்குநர் மணிரத்னம் குறித்து அருண் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். மணிரத்னத்துடன் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான சிற்பி
மேலும் மணிரத்னம் போன்ற ஜாம்பவானுடன் பணிபுரிந்தது மிகவும் பாக்கியம் என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு நடிகரையும் சிறப்பாக செதுக்குபவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள சினம் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.