என்ன சொல்றீங்க...ஏகே 61ல் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கலியா...அப்புறம் ?
சென்னை : ஏகே 61 படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் தான் இந்த ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

இரட்டை வேடத்தில் அஜித்
ஏகே 61 படத்தில் அஜித், ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதில் அஜித்திற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக சொல்லப்பட்டது. இதனால் வாலி, வில்லன் படங்களைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக ரசிகர்கள் குஷியாகினர்.

இரண்டிற்கும் என்ன சம்பந்தம்
மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதாக வெளியான தகவல் படத்திற்கு மற்றொரு ப்ளசாக அமைந்தது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட கதை என்பதால் ஆக்ஷன், த்ரில்லிங் என அனைத்தும் இருப்பதாக கூறப்பட்டது. அதே சமயம் வலிமை படம் அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்காது என்றும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் காலேஜ் ப்ரொஃபசருக்கும் வங்கி கொள்ளைக்கும் என்ன தொடர்பு என கேட்டு வந்தனர்.

அந்த போட்டோ வரவேயில்லையே
ஏகே 61 படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டதே தவிர, இதுவரை வெளியான ஸ்டில்கள் அனைத்திலும் அஜித் வயதான கெட்அப்பில், நீண்ட வெள்ளை தாடியுடன் இருக்கும் ஸ்டில்கள் தான் வெளியாகி உள்ளன. ஒரு கெட்அப் வயதான தோற்றத்தில் இருப்பதால் மற்றொரு கெட்அப், இளமை தோற்றமாக தான் இருக்க வேண்டும் என, இதற்காக தான் அஜித் 25 கிலோ வரை எடையை குறைத்திருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

என்னது இரட்டை வேடம் இல்லையா
ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 61 படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லையாம். இரண்டு கெட்அப்களில் தான் நடிக்கிறாராம். Dual role கிடையாது. Dual look மட்டும் தான் என சொல்லப்படுகிறது. அப்படியானால் இதில் அஜித் ஹீரோவா அல்லது வில்லனா என நெட்டிசன்கள் கேட்க துவங்கி விட்டனர். அஜித்தின் ரோல் பற்றிய இந்த தகவல், என்ன கதை, என்ன ரோல் என்பது பற்றிய உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

குழப்பத்தில் நெட்டிசன்கள்
ஏற்கனவே வங்கி கொள்ளைக்கும், காலேஜ் ப்ரொஃபசருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கே விடை புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறோம். இதில், இரட்டை வேடம் கிடையாது என புதிதாக மற்றொரு குழப்பத்தை ஏற்படுத்துறீங்களே. அஜித், ஃபிளாஷ்பேக் சீனில் இளமையான, ஸ்லிம் தோற்றத்தில் வருகிறார் என்றாலும், அவர் ஹீரோ தானே. அப்படியானால் வில்லன் வேறு ஒருவராக தானே இருக்க முடியும். ஒரே ஆள் எப்படி ஹீரோ - வில்லன் என இரு ரோல்களில் நடிக்க முடியும் என நெட்டிசன்கள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











