என்னது...சுதா கொங்கரா படத்தில் அஜித் – சூர்யா இணைந்து நடிக்கிறார்களா?

சென்னை : டைரக்டர் சுதா கொங்கரா இயக்க உள்ள படத்தில் அஜித் மற்றும் சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இறுதிச்சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கி, அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் சுதா கொங்கரா. இவர் அடுத்து யாரை இயக்க போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சுதா கொங்கராவே தனது படங்கள் பற்றி அப்டேட் கொடுத்த ட்விட்டரில் இணைந்தார்.

அஜித்தை இயக்க போகிறாரா

அஜித்தை இயக்க போகிறாரா

இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக அஜித் நடிக்கும் படம் ஒன்றை இயக்க போவதாகவும், இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க போவதாகவும் தகவல் பரவியது. பிறகு அஜித் தற்போது ஏகே 61, ஏகே 62 படங்களில் பிஸியாக இருப்பதால் சுதா கொங்கரா - அஜித் படம் இப்போதைக்கு இல்லை என கூறப்பட்டது. மற்றொரு தகவலாக சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவை இயக்க போவதாகவும் கூறப்பட்டது.

இந்த படமும் இவர் தானா

இந்த படமும் இவர் தானா

இது ஒரு புறம் இருக்க சூரரைப் போற்று இந்தி ரீமேக்கையும் சுதா கொங்கரா இயக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், பூஜையுடன் இந்த படத்தின் வேலைகள் தற்போது துவங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது.

அஜித் - சூர்யா ஒரே படத்திலா

அஜித் - சூர்யா ஒரே படத்திலா

இதற்கிடையில் கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படங்களை தயாரித்து பாப்புலரான ஹம்பாலே ஃபிலிம்ஸ், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சுதா கொங்கரா தான் இயக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அஜித் - சுதா கொங்கரா இணையும் படத்தை தான் ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மற்றொரு தகவலாக இந்த படத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் - சூர்யா ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்களா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

என்னப்பா குழப்புறீங்க

என்னப்பா குழப்புறீங்க

ஆனால் சுதா கொங்கரா - சூர்யா இணையும் படத்தை 2டி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுவதால் அஜித் - சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றே கூறப்படுகிறது. அதோடு சூர்யா ஏற்கனவே சூர்யா 41, வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கும் படம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை சுதா கொங்கரா முடித்த பிறகே சூர்யாவுடனான படம் பற்றி அறிவிக்கப்பட வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்திற்காக தான் வெயிட்டிங்கா

அஜித்திற்காக தான் வெயிட்டிங்கா

அதே சமயம் அஜித்தும் தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை முடித்த பிறகு லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சுதா கொங்கரா - ஹம்பாலே ஃபிலிம்ஸ் படத்தின் அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X