twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவுரை சொன்ன ஸ்வேதா மோகன் - பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

    |

    சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாடகி ஸ்வேதா மோகன் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ள சொல்லி அறிவுரை கூறியிருக்கிறார்.

    அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் முயற்சி செய்கிறேன் டியர் என தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

    தற்போது 55 வயதாகும் ஏ.ஆர்.ரஹ்மான், இடைவிடாது பல நாடுகளுக்கு பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றார்.

    தொடர்ந்து 2 நாட்களாக டிரெண்டிங்கில் KamalHaasan...உலக நாயகன், உலகநாயகன் தான் தொடர்ந்து 2 நாட்களாக டிரெண்டிங்கில் KamalHaasan...உலக நாயகன், உலகநாயகன் தான்

    உடல்நலத்தையும் பாருங்கள் சார்

    உடல்நலத்தையும் பாருங்கள் சார்

    இந்நிலையில், "சார் தயவு செய்து நன்றாக உறங்குங்கள். .உங்களது உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்' என பாடகி ஸ்வேதா மோகன் ட்வீட் ஒன்றை செய்திருக்கிறார். அதற்கு பதிலளித்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், "தேங்கியூ டியர்.. முயற்சி செய்கிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.

    இடைவிடாது இசை நிகழ்ச்சி

    இடைவிடாது இசை நிகழ்ச்சி

    கடந்த சில மாதங்களாக ஏ.ஆர்.ரஹ்மான் இடைவிடாத பயணங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். மகள் திருமணம், துபாய் எக்ஸ்போ, கான்ஸ் திரைப்பட விழா, ஐபிஎல் இசை கச்சேரி அடுத்து வரப்போகும் அமெரிக்க இசைக்கச்சேரி என இந்த ஆண்டு துவக்கம் முதல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஓய்வு என்பதே இருப்பதில்லை.

    இரவில் வேலை செய்யும் ரஹ்மான்

    இரவில் வேலை செய்யும் ரஹ்மான்

    ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் இரவு முழுவதும் பணியாற்றி பகலில் உறங்குபவர். இரவில் பணியாற்றும் போது ஒரு அமைதி நிலவுவதாக அவர் கருதுகின்றார். இத்தகவலை பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தங்களது பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். "நீண்ட காலமாகவே நான் வீட்டிலிருக்கும் ஸ்டுடியோவில் இருந்து தான் பணியாற்றுகிறேன். படைப்பாற்றல் சம்பந்தப்பட்ட வேலை என்று வரும்போது நாம் வலுக்கட்டாயமாக வேலை செய்ய முடியாது. மிகப்பெரிய யோசனை 5 நிமிடங்களில் தோன்றலாம். அதே யோசனைக்கு ஒரு வருடமும் ஆகலாம். எனது அலுவலகத்தில் இரவில் நான் வேலை செய்யும்போது கூட நான் வீட்டில் அணியும் சகஜமான உடைகளை அணியமாட்டேன். எனது குடும்பத்தினர் எனது ஸ்டுடியோவுக்குள் வந்தால் கூட அதற்கேற்றார் போல உடை அணிந்திருக்க வேண்டும்.வேலை செய்யும்போது மொபைல், லேப்டாப் என அனைத்தையும் அணைத்து வைப்பேன். வேலை செய்து கொண்டிருக்கும்போது வரி கட்டுங்கள் என்று ஒரு செய்தி வந்தால் அது கவனத்தைச் சிதறடிக்கும். மொபைல்கள் இல்லாமல் வாழ்வது கடினம் தான் என்றாலும் வேலை செய்யும் அந்த ஒரு மணிநேரம், உள்ளுணர்வுக்குள் ஆழமாகச் சென்று வேலையில் கவனம் செலுத்துவது அவசியம்" என பேட்டி ஒன்றில் ஏஆர்.ரஹ்மான் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அளவிற்கு மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

    வடக்கு அமெரிக்க பயணம் 2022

    வடக்கு அமெரிக்க பயணம் 2022

    இந்த ஆண்டு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 21 வரை வடக்கு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 1 மாதத்துக்கும் மேல் அவரது இசைப் பயணம் தொடர இருக்கிறது. இதனிடையே, தமிழில் இரவின் நிழல், பொன்னியின் செல்வன், மலையாளத்தில் ஆடுஜீவிதம் என அடுத்தடுத்து திரைப்பட வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    What AR Rahman Replied to Shwetha Mohan after she gave advice to him
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X