»   »  கமல் மட்டும் அரசியலுக்கு வந்தால் ரொம்ப கஷ்டம்: பாரதிராஜா- பிளாஷ்பேக்

கமல் மட்டும் அரசியலுக்கு வந்தால் ரொம்ப கஷ்டம்: பாரதிராஜா- பிளாஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் அரசியலுக்கு வருவதாக முடிவெடுத்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்பே எச்சரித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்களோ, அவரை அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இருப்பினும் அவர் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் இல்லாமல் உள்ளார்.

பேட்டி

பேட்டி

அண்மையில் அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டி அரசியல் தலைவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பணம் மற்றும் இலவசங்களை பெற்றுக் கொண்டு ஜனநாயகம் என்னும் சக்திவாய்ந்த ஆயுதத்தை வீணாக்கிவட்டதாக கமல் தெரிவித்தார்.

தேர்தல்

தேர்தல்

தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான புதிய தலைவரை மக்களே தேர்வு செய்யட்டும் என்றும் கமல் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

பாரதிராஜா

பாரதிராஜா

கமல் ஹாஸனிடம் யாரும் வச்சுக்க வேண்டாம் அது நல்லது இல்லை என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்பே எச்சரித்திருந்தார். கமல் அரசியலுக்கு வந்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என அவர் கூறியிருந்தார்.

அரசியல்

அரசியல்

கமல் அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டால் அவர் அனைத்து நுணுக்கங்கள் மற்றும் வெற்றிகரமான அரசில்வாதியாக இருக்கத் தேவையான அனைத்தையும் கற்றுவிட்டு தான் வருவார் என்றார் பாரதிராஜா.

மிருதங்கம்

மிருதங்கம்

அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் ஒரு காட்சியில் கமல் மிருதங்கம் வாசிக்க வேண்டும். அந்த காட்சியில் நடிக்கும் முன்பு கமல் மிருதங்கம் கற்றுத் தேர்ந்துவிட்டார். எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற தனது தாயின் வார்த்தையை மனதில் வைத்து செயல்படுகிறார் கமல்.

English summary
Director Bharathiraja once told that if Kamal Haasan decides to enter politics it will be very difficult to control him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil