என்னது...நயன்தாராவால் பொன்னியின் செல்வனிற்கு நோ சொன்னாரா சிம்பு?

சென்னை : பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பான் இந்தியா படமான இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Recommended Video

Rewind Raja | Vikram கடந்து வந்த பாதை | *Celebrity

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யுட்யுப்பில் இதுவரை 30 மில்லியன் பார்டைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதே சமயம் இது பாகுபலி படத்தை போல இருப்பதாக சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் படம் பற்றி பல அதிர வைக்கும், ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அருள் மொழி வர்மன் உள்ளிட்ட சில பெயர்கள் தவறாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டதும் சர்ச்சையாக்கப்பட்டது.

3 வது முறையில் வெற்றி

3 வது முறையில் வெற்றி

பொன்னியின் செல்வன் படத்தை 1980 கள் முதல் படமாக எடுக்க முயற்சித்து, அது முடியாமல் போனதாகவும், முன்றாவது முறை முயற்சியில் தான் பொன்னியின் செல்வன் படத்தை தான் இயக்கியதாக டைரக்டர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

மணிரத்னத்தில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இவர்களா

மணிரத்னத்தில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இவர்களா

இதனால் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க முடிவு செய்த போது முதலில் அவர் நடிகர், நடிகைகளாக யாரையெல்லாம் தேர்வு செய்தார் என்ற தகவலும் பரவி வருகிறது. விஜய், விக்ரம், மகேஷ்பாபு, அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்டோரை தான் மணிரத்னம் முதல் முறையாக முக்கிய ரோல்களில் நடிக்க தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு

நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு

இதற்கிடையில் மற்றொரு பரபரப்பு தகவலாக, தற்போது இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முதலில் சிம்புவின் பெயரும் தேர்வு செய்யப்பட்டதாம். பிறகு இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்க முடிவு செய்யப்பட்டதாம். நயன்தாரா நடிக்கிறார் என்றதால், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்தி, படத்தில் இருந்து சிம்பு விலகியதாக தகவல் ஒன்று தீயாய் பரவியது.

தீயாய் பரவிய வதந்தி

தீயாய் பரவிய வதந்தி

சிம்புவும் நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்து வந்தாகவும், திருமணம் செய்யும் அளவிற்கு போனதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் பற்றி பல காதல் வதந்திகள் பரப்பப்பட்டன. பிறகு பிரேக் அப் ஆகி இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது. டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததால் மீண்டும் காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்தன.

படக்குழு என்ன சொல்கிறது

படக்குழு என்ன சொல்கிறது

இந்த விவகாரம் பொன்னியின் செல்வன் படத்தை விட்டு வைக்கவில்லை. பொன்னியின் செல்வனில் சிம்பு நடிப்பதாக இருந்ததாகவும், பிறகு நயன்தாரா நடிப்பதால் அவர் விலகியதாகவும் சொல்லப்பட்ட தகவல் பரவியது பற்றி பொன்னியின் செல்வன் டீமிடமே விசாரிக்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் கிடையாது. இது பொய்யான தகவல் என படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X