குடிபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை?- வீடியோ
மும்பை: ஸ்ரீதேவி நாட்டுக்கு என்ன செய்துவிட்டார் என்று அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
அவருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடந்தது.
எதற்கு
மதுபோதையில் இறந்த ஒரு நடிகைக்கு எதற்காக அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. அவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றதாலும், கலையுலகில் சிறந்து விளங்கியதாலும் அரசு மரியாதை அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
ராஜ் தாக்கரே
ஸ்ரீதேவி சிறந்த நடிகை. ஆனால் அவர் நாட்டிற்கு என்ன செய்துவிட்டார் என்று அவரின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்தினார்கள் என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
மீடியா
நீரவ் மோடி மோசடியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கை அவ்வளவு பெரிய அளவில் கவர் செய்யுமாறு மீடியாவிடம் அரசு தெரிவித்திருக்கிறது என்கிறார் ராஜ் தாக்கரே.
மிரண்டது
ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவரின் இறுதி ஊர்வலத்தை அனைத்து மீடியாக்களும் கவர் செய்ததை தான் ராஜ் தாக்கரே சுட்டிக் காட்டியுள்ளார்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.