»   »  'ஜூலி 2' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் என்ன பண்ணியிருக்காங்க பாருங்க...

'ஜூலி 2' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் என்ன பண்ணியிருக்காங்க பாருங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : தென்னிந்திய படங்களில் பிரபலமாக இருந்த நடிகை ராய் லக்‌ஷ்மி, பாலிவுட்டில் 'ஜூலி 2' படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் லட்சுமி ராய் மிகவும் கவர்ச்சியாக பிகினி உடைகள் அணிந்து நடித்திருக்கிறார்.

முதல் படத்திலேயே பாலிவுட் மார்க்கெட்டை தன் பக்கம் வளைத்துப் போட நினைத்த ராய் அதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

What did the sensor board say after seeing 'Julie 2'?

'ஜூலி 2' படத்தின் போஸ்டர்கள், டீசர்கள் எல்லாம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்த கட்டும் கொடுக்கவில்லை, மாறாக 'ஏ' சான்று அளித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து இப்படத்தைத் தயாரித்து, வெளியிடும் முன்னாள் சென்சார் போர்டு தலைவர் பக்லஜ் நிகலனி கூறுகையில், 'ஜூலி 2 படத்திற்கு ஏ சான்று தான் கிடைக்கும் என நம்பினேன். அது நடந்துள்ளது, எந்த கட்டும் இல்லாமல் ஏ சான்று கொடுத்துள்ளார்கள்.

இது வயது வந்தோர் மட்டுமே பார்க்க கூடிய படம். படத்தில் நிர்வாண காட்சியோ, டபுள் மீனிங் வசனங்களோ எதுவும் கிடையாது. சென்சார் போர்டு தங்கள் பணியை சரியாக செய்திருக்கிறார்கள்' என்றார். 'ஜூலி 2' படத்தை தீபக் சிவதாஷினி இயக்க, விஜய் நாயர் மற்றும் பக்லஜ் நிகலனி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

English summary
Actress Raai Laxmi has acted in 'Julie 2' in Bollywood. The sensor board has certified 'A' without any cuts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil