For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விஷால் வீட்டுக்கு வந்த மர்ம கார்?அண்ணாநகர் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்!ஜன்னல் கண்ணாடிகள் சிதறின

  |

  நடிகர் விஷாலின் அண்ணா நகர் வீடு மீது நேற்றிரவு மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

  கல்வீச்சு சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது. மர்ம கார் வந்துபோனது பதிவாகியுள்ளது.

  விஷாலுக்கு எந்த எதிரியும், பிரச்சினைகளும் இல்லாத நிலையில் அவர் வீடு மீது யார் தாக்குதல் நடத்தி இருக்க முடியும். தாக்குதல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?

   ஆந்திரா பூர்வீகம் சென்னையில் வளர்ந்த விஷால்

  ஆந்திரா பூர்வீகம் சென்னையில் வளர்ந்த விஷால்

  நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார். விஷாலின் தந்தை மிகப்பெரிய தயாரிப்பாளர். ஜி.கே.ரெட்டி ஆவார். பிறப்பால் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் படித்து லயோலா கல்லூரியிலும் படித்தவர். இவர் முதன் முதலாக தமிழில் செல்லமே படம் மூலமாக 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அடுத்தடுத்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், துப்பறிவாளன், சண்டைக்கோழி-2 என தொடர்ந்து நடித்து வருகிறார்.

   லைகாவுடன் பணம் கொடுக்கல் வாங்கலில் வழக்கு

  லைகாவுடன் பணம் கொடுக்கல் வாங்கலில் வழக்கு

  விஷால் துடிப்பான இளைஞர். மிகப்பெரிய வலுவான சரத்குமார்-ராதாரவி கூட்டணியை முறியடித்து பஞ்ச பாண்டவர் என்கிற அணியை அமைத்து நடிகர் சங்கத்தை கைப்பற்றினார். திரையுலகின் முன்னணி இளம் கலைஞர்கள் அனைவரும் விஷாலுக்கு ஆதரவளித்தனர். விஷால் சொந்தமாக படம் தயாரிக்கிறார், படத்தயாரிப்பு விவகாரங்களில் விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ளது. அவரது அலுவலகத்தில் வேலைப்பார்த்த ஒருவர் பணம் கையாடல் சம்பந்தமாக புகார் உள்ளது.

   சினிமாவில் நடக்கும் சின்ன சின்ன மோதல்கள்

  சினிமாவில் நடக்கும் சின்ன சின்ன மோதல்கள்

  ஆரம்பத்தில் நட்பாக பழகிய நடிகர்கள் பின்னர் தங்களுக்கு மோதிக்கொண்டனர். வெளியில் பரபரப்பாக தெரியாவிட்டாலும் திரையுலகில் இன்னார் இன்னார் நெருக்கம், இவருக்கு இவரை ஆகாது என இளம் நடிகர்கள் குறித்த அனைத்து விஷயங்களும் வெளிப்படை. அப்படி ஒரு விவகாரத்தில் ஆரம்பத்தில் நண்பனாக இருந்த சில நடிகர்கள் பின்னர் எதிரியாகி போனார்கள். அது நடிகர் சங்க தேர்தலிலும் ஒலித்தது. அதன் பின்னரும் அவ்வப்போது மோதல் குறித்த தகவல்கள் கசியும். ஆனால் அவர்களே பொதுமேடையில் கட்டியணைத்துகொள்வார்கள். இது சினிமா நட்பு. இதுப்போல் பல பரபரப்பான சம்பவங்களுக்கு சொந்தக்காரர் விஷால்.

   விஷால் வீட்டுக்கு வந்த மர்ம கார்.. கல்வீச்சு...சிசிடிவியில் சிக்கிய நபர்கள்

  விஷால் வீட்டுக்கு வந்த மர்ம கார்.. கல்வீச்சு...சிசிடிவியில் சிக்கிய நபர்கள்

  விஷால் சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டருகில் காரில் வந்த சில மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இது குறித்து விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்று புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விஷால் வீட்டுக்கு வந்த மர்ம ஷிப்ட் கார் யாருடையது என விசாரித்து வருகிறார்கள். கல் வீச்சு சம்பவம் நடைபெற்றபோது, நடிகர் விஷால் வெளியூரில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

  Read more about: vishal actor tamil thimiru sandakozhi
  English summary
  Last night, miscreants attacked actor Vishal's Anna Nagar house by pelting stones. The windows of the house were broken in the stone pelting incident. A mysterious car has been reported. Who could have attacked Vishal's house when he had no enemies and no problems? A complaint has been lodged with the police about the attack.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X