»   »  ஐஸ்வர்யாவா, பரதத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அல்லவா ஐ.நா.வில் ஆடியிருக்க வேண்டும்: முருகசங்கரி

ஐஸ்வர்யாவா, பரதத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அல்லவா ஐ.நா.வில் ஆடியிருக்க வேண்டும்: முருகசங்கரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ. நா. சபையில் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியது சரியில்லை என்று பரதக் கலைஞர் முருகசங்கரி லியோ பிரபு மற்றும் கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் தெரிவித்துள்ளனர்.

மகளிர் தினத்தையொட்டி ஐ. நா. சபையில் நடந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார். அவர் ஆடியது பரதக் கலைஞர்கள் பலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

மேலும் நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

ஜாம்பவான்கள்

ஜாம்பவான்கள்

ஜாம்பவான்கள் மற்றும் தேசிய அளவில் பிரபலமான பல கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் அந்த அரங்கில் ஆடியிருக்க வேண்டும். ஷோபானா பிரபல நடிகையாக இருந்தாலும் அவர் சிறந்த நடன கலைஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது என கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நான் 14 ஆண்டுகளாக கிளாசிக்கல் நடன கலைஞராக உள்ளேன். ஐஸ்வர்யா ஒரு நடன கலைஞர் என்பதே எனக்கு அண்மையில் தான் தெரியும். அவரின் நடனம் சரியில்லை என்று ஸ்ரீதா மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரம்

அதிகாரம்

எந்த துறையாக இருந்தாலும் அதிகாரம் மற்றும் பெரிய இடத்து ஆட்களை தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு பல வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு கலைஞர் அதிகாரம் உள்ளவராக இருந்தாலும் சிறந்தவராக இருந்தால் பரவாயில்லை என்று பரதநாட்டிய கலைஞரும், ஆய்வாளருமான முருகசங்கரி லியோ பிரபு கூறியுள்ளார்.

பரதம்

பரதம்

பரதம் சவாலான கலை. அதற்காக பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். அப்பேர்பட்டவர்கள் தான் உலக அரங்கில் நடனமாட வேண்டும். திரையுலகில் பெரிய இடத்து வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பது கங்கனா ரனாவத் கூட அண்மையில் தெரிவித்திருந்தார். அது இங்கு மட்டும் அல்ல உலக அளவில் நடைபெறுகிறது என நினைக்கிறேன் என்கிறார் முருகசங்கரி.

English summary
Bharatanatyam exponent Murugashankari Leo Prabhu said that those who have dedicated their lives for Bharatanatyam should have performed in UN.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil