»   »  உத்தம வில்லன் எப்பூடி?: சூப்பர், கிளாசிக், மொக்கை- இது ட்விட்டர் விமர்சனம்

உத்தம வில்லன் எப்பூடி?: சூப்பர், கிளாசிக், மொக்கை- இது ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தம வில்லன் படத்தை பார்த்த ரசிகர்கள் கமல் ஹாஸனின் நடிப்பை பாராட்டி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கே. பாலசந்தர், உலக நாயகன் கமல் ஹாஸன், நாசர், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்த உத்தம வில்லன் படம் வெளிநாடுகளில் பிரச்சனை இல்லாமல் ரிலீஸானது. ஆனால் சில பிரச்சனைகளால் தமிழகத்தில் தான் அறிவித்தபடி ரிலீஸாகவில்லை. பின்னர் ஒரு வழியாக ரிலீஸானது.


இந்நிலையில் படம் குறித்து ட்விட்டரில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில இதோ,


குலோத்துங்கன்

இது போன்ற நடிப்பை கமலிடம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.! அந்த உத்தம நடிப்பை உத்தம வில்லனில் பாருங்கள்! #UttamaVillain #UthamaVillain என குலோத்துங்கன் என்பவர் தெரிவித்துள்ளார்.


கிரிதரன் நம்பி

#Uthamavillain ஒரு கிளாசிக். கமல் மற்றும் கே.பி. சார் ஆகியோர் சினிமாவின் கடவுள்கள்!!! பல காலம் கழித்து கண்ணீர் வர வைத்த படம் இது என்று கிரிதரன் நம்பி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.


ஜைக்

#Uthamavillain மோசம் எல்லாம் இல்லை. படத்தில் கமல் தனது மகனுடன் பேசுவது, மகள் கடிதத்தை வாசிப்பது டச்சிங்காக இருந்தது. நான் அழுதுவிட்டேன் என்கிறார் ஜைக்.


தனுஷ்கே ராஜா

மேலும் ஒரு நல்ல படம். ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கியுள்ளனர் #Uthamavillain, கமல் சார் மற்றும் நாசருக்கு ஹேட்ஸ் ஆஃப். அருமையான நடிப்பு என தனுஷ் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


முச்சாலா மகேஷ் ரெட்டி

கடைசி 15 நிமிடங்களை தவிர உத்தம வில்லன் செம சொதப்பல். கமல் ஹாஸன் தனது தரத்தை உயர்த்தியுள்ளதால் அவரது ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்த படம் அவரது திறமையில் 20 சதவீதத்தை கூட வெளிப்படுத்தவில்லை. கமல் ஹாஸன் மற்றும் கே. பாலசந்தர் இடையேயான காட்சிகளை தவிர பிற காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. பல திறமையான நடிகர்களின் திறமை இந்த படத்தில் வீணாகியுள்ளது என்று மகேஷ் ரெட்டி கூறியுள்ளார்.


ராஜ்

நல்ல படம் #Uthamavillain...கமல் ஹாஸன் அருமையாக நடித்துள்ளார்...டோன்ட் மிஸ் இட் என ராஜ்முருகன் ட்வீட் செய்துள்ளார்.


English summary
Kamal Haasan starrer Uthama Villain has got mixed reviews in twitter. While many praise the movie and Ulaga Nayagan, some don't like it.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil