Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அமிதாப் பற்றி ஷாருக்கானின் மகன் என்ன நினைக்கிறார் தெரியுமா?
மும்பை: ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் தன்னை தாத்தாவாக நினைப்பதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் 7வது பிறந்தநாளையொட்டி பார்ட்டி கொடுத்தார்கள். அந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களின் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
நடிகர் ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் பார்ட்டிக்கு வந்திருந்தார்.
ஆப்ராம்
பார்ட்டிக்கு வந்த ஆப்ராமுக்கு அமிதாப் பச்சன் கை கொடுக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆப்ராம் அமிதாபை அன்னாந்து பார்க்கும் அந்த புகைப்படத்தை ஷாருக்கானின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் க்யூட் என்கிறார்கள்.
ஷாருக்கான்
ஆப்ராமின் புகைப்படத்தை வெளியிட்ட அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருப்பதாவது, ஷாருக்கானின் இளைய மகன் நான் தான் அவரின் தந்தையின் தந்தை என்று சந்தேகமே இல்லாமல் நம்புகிறார். ஷாருக்கானின் தந்தை ஏன் தங்களுடன் தங்கவில்லை என்று வியக்கிறார் என்று கூறியுள்ளார்.
அப்பா
கபி குஷி கபி கம் படத்தை பார்த்த ஆப்ராம் அமிதாப் பச்சன் தான் தனது தந்தை ஷாருக்கானின் அப்பா என்று நம்புகிறார். (அந்த படத்தில் ஷாருக்கான் தந்தையாக அமிதாப் நடித்திருந்தார்) இதை ஷாருக்கான் கூட முன்பு தெரிவித்திருந்தார். என் கடைசி பையனை பொருத்த வரை அமிதாப் பச்சன் தான் என் அப்பா என்று கூறி சிரித்தார் ஷாருக்கான்.
கஜோல்
படங்களை பார்த்துவிட்டு அது அப்படியே உண்மை என்று நம்புகிறார் ஆப்ராம். ஒரு படத்தில் ஷாருக்கானுக்கு எதிராக கஜோல் வில்லத்தனம் செய்ததை பார்த்த ஆப்ராம் அவர் மீது கோபப்பட்டுள்ளார். அதன் பிறகு கஜோலை பார்த்தபோது முகத்தை திருப்பிக் கொண்டாராம் ஆப்ராம்.