»   »  ஒன்னும் சொல்ல முடியாது: ரஜினி படம் குறித்து இந்தி நடிகை ஹூமா பேட்டி

ஒன்னும் சொல்ல முடியாது: ரஜினி படம் குறித்து இந்தி நடிகை ஹூமா பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் நடிப்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது. தயாரிப்பாளர்கள் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்திற்கு பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியை ஹீரோயினாக்கயுள்ளார்களாம். பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப்புடன் கிசுகிசுக்கப்பட்டவர் ஹூமா.


What does Huma Qureshi say about acting with Rajini?

தற்போது சல்மான் கானின் திருமணமான தம்பி சொஹைல் கானுடன் சேர்த்து பேசப்படுகிறார். ரஜினிக்கு ஜோடியாக இந்த ஹூமாவை விட்டால் ரஞ்சித்துக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா என்று ரசிகர்கள் ஏற்கனவே கடுப்பில் உள்ளனர்.


இந்நிலையில் ரஜினியுடன் நடிப்பது குறித்து ஹூமா கூறும்போது,


படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதனால் ரஜினியுடன் நடிப்பது குறித்து எதுவும் கூற முடியாது. அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்.

English summary
Bollywood actress Huma Qureshi said that we have to wait till the producers of Rajinikanth's movie make an announcement about her role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil