ஷூட்டிங் இடைவேளையில் ஜனனியும் அசோக் செல்வனும் செய்த வேலை... வைரலாகும் வீடியோ!
படப்பிடிப்பு இடைவேளையில் தாங்கள் என்ன செய்வோம் என்பதை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஜனனியும், அசோக் செல்வனும்.
சென்னை: நடிகர் அசோக் செல்வனும், நடிகை ஜனனியும் படப்பிடிப்பு இடைவேளையில் செல்போனில் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித்தின் பில்லா 2 மூலம் அறிமுகமாகி, சூது கவ்வும், வில்லா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். அதேபோல், திருதிரு துறுதுறு படம் மூலம் அறிமுகமாகி, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் தெகிடி. இந்த படம் தான் இருவரது சினிமா வாழ்விலும், ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதில் இருந்து இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, அசோக் செல்வனும், ஜனனியும் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இடைவேளையில் இருவரும் என்ன செய்வார்கள் என்பதை ஒரு வீடியோவாக எடுத்து, தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், காரின் டிரைவர் சீட்டில் ஜனனி அமர்ந்து செல்பி வீடியோ எடுக்கிறார். பின் இருக்கையில் அசோக் செல்வன் அமர்ந்துள்ளார். பாட்ஷா படத்தில் வரும் 'அழகு... நீ நடந்தால் நடையழகு' பாடலுக்கு, ரஜினி ஸ்டைலில் அசோக் செல்வன் முடியை கோதிவிட, நக்மா போல் பாவனை செய்கிறார் ஜனனி.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு, அவர்களுடைய ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாக மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications











