»   »  ரம்பாவை விட்டுட்டு, போய் புள்ள குட்டிய படிக்க வைங்க: குஷ்பு

ரம்பாவை விட்டுட்டு, போய் புள்ள குட்டிய படிக்க வைங்க: குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்பா விஷயத்தில் மக்கள் தங்களின் கற்பனைத் திறனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவரது விவாகரத்து செய்தி பற்றி பலரும் பேசும் நிலையில் அவரை கனடாவில் சந்தித்தேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை ரம்பா தனது கணவர் இந்திரன் பத்மநாதனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து அறிந்த ரம்பா தனது திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ரம்பா

ரம்பா விஷயத்தில் மக்கள் தங்களின் கற்பனைத் திறனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவரது விவாகரத்து செய்தி பற்றி பலரும் பேசும் நிலையில் அவரை கனடாவில் சந்தித்தேன்.

புது வீடு

ரம்பா மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்தேன். அவரது கணவர் அவருக்காக கட்டியுள்ள புதிய பங்களாவில் குடியேற திட்டமிட்டுள்ளார். ரம்பாவுடன் தொடர்பில் உள்ளேன்.

குழந்தைகள்

ரம்பா தேவதைகள் போன்ற தனது 2 மகள்கள், பாசமான கணவருடன் செட்டிலாகிவிட்டார். அவர் நிம்மதியாக வாழட்டும். உங்களின் மனதிற்கு ஓய்வு கொடுங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

வதந்தி

வதந்தி

ரம்பா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்துவிட்டதாக வதந்தி பரவியுள்ளது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

English summary
Actress Khushbu tweeted that, 'RAMBHA is well settled into domesticity with her 2 angelic girls,caring hubby n loving in laws..let her live in peace n allw ur mind 2 rest'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil