twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    '96' ஒரு அயோக்கியத்தனமான படம்: பார்த்திபன்

    By Siva
    |

    Recommended Video

    96 படத்தின் 100வது நாள் வெற்றிவிழா- வீடியோ

    சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 ஒரு அயோக்கியத்தனமான படம் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசியதாவது,

    போன தடவை 'தாடி'யை வச்சி சமாளிச்சீங்க.. இப்போ என்ன பண்ணப் போறீங்க தனுஷ்? போன தடவை 'தாடி'யை வச்சி சமாளிச்சீங்க.. இப்போ என்ன பண்ணப் போறீங்க தனுஷ்?

    காதலி

    காதலி

    காதலிப்பதற்கு காதலனோ, காதலியோ தேவையில்லை. காதல் மட்டுமே போதுமானது. உருவம் தவிர்த்து உணரத் தொடங்கு கடவுளோ, காதலோ என்று நான் எழுதியிருக்கிறேன். காதலாக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி உருவத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் அழகான விஷயம் உள்ளது புரியும்.

    திருமணம்

    திருமணம்

    பொதுவாகவே நாம் ஆசைப்படுவது ஒரு இடம், வாழ்க்கைப்படுவது வேறொரு இடமாக இருக்கும். இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும். நாம் ஒருவரை ஆசைப்படுவோம். ஆனால் வேறு ஒருவருடன் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்போம்.

    எதார்த்தம்

    எதார்த்தம்

    ஜுராசிக் பார்க் படம் பார்த்திருப்போம். தற்போது டைனோசர் இல்லை. ஆனால் டைனோசர் இருப்பது போன்று காட்டி நம்மை பயமுறுத்தியிருப்பார்கள். அந்த டைனோசர் போன்று தான் 96 படத்தில் வந்த காதல். 96 ஒரு எதார்த்தமான படம் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் எனக்கு தெரிந்து இது எதார்த்தமான படம் இல்லை.

    அயோக்கியத்தனம்

    அயோக்கியத்தனம்

    படம் ரிலீஸான பிறகு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு எல்லோர் போன்றும் ராத்திரி எல்லாம் தூங்காமல், புலம்பினேன். இது ரொம்ப அயோக்கியத்தனமான படம் என்று இயக்குனரிடம் கூறினேன். எந்த காலகட்டத்தில் என்ன படம் எடுத்திருக்கிறீர்கள் என்றேன். இந்த படத்தில் ஜானுவும், ராமும் ஒரேயொரு முறை கட்டிப்பிடித்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இழுத்து இழுத்து இயக்குனர் நம்மை ஏங்க வைத்துவிட்டார்.

    சினிமா

    சினிமா

    யமுனை ஆற்றிலே பாடல் ஒரிஜினல் படத்தை விட இதில் அழகாக இருந்தது. எனக்கும் ஒரு காதல் இருந்திருக்கு. ஒரு காதல் என்பது பொய். ஒரு காதல் இருந்திருக்கு. அந்த காதலியை நான் இப்போ கூட பார்க்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பெண் எனக்கு போன் செய்து உங்களை பார்க்க முடியுமா என்று கேட்டுவிடக் கூடாது. அப்படி ஒரு காதல். அனைவருக்குள்ளும் தெய்வீகமான காதல் இருக்கும். ஆனால் அதை படமாக்குவது எளிது அல்ல என்கிறார் பார்த்திபன்.

    English summary
    Actor cum director Parthiban has criticised Vijay Sethupathi starrer 96 in his own unique way.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X