»   »  'பாகுபலி 2'-ஐ டவுன்லோடு பண்ணி பார்த்தா கம்ப்யூட்டரே காரித் துப்பிடும்: ஆர்.ஜே. பாலாஜி

'பாகுபலி 2'-ஐ டவுன்லோடு பண்ணி பார்த்தா கம்ப்யூட்டரே காரித் துப்பிடும்: ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படத்தை டவுன்லோடு செய்து பார்த்தால் கம்ப்யூட்டரே காரித் துப்பிடும் என்று நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோரை வைத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 540 கோடி வசூலித்துள்ளது.

ரிலீஸான அன்று மட்டும் ரூ. 121 கோடி வசூல் செய்தது.

ரூ. 1000 கோடி

ரூ. 1000 கோடி

இன்னும் தியேட்டர்களில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குகிறார்கள். பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடியை அசால்டா வசூல் செய்துவிடும் என்று நம்பப்படுகிறது.

பாலாஜி

பாலாஜி

பாகுபலி 2 படத்தை பார்த்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். படத்தை பார்த்தேன் பல காலம் இந்திய சினிமாவின் சிறந்த படமாக இருக்கப் போகிறது என தெரிவித்துள்ளார் பாலாஜி.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி படத்தை அளித்த ராஜமவுலி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். பாகுபலி 2 படம் அருமையான சினிமா அனுபவம் மற்றும் இதுவைர வெளியான இந்திய படங்களில் சிறந்தது என பாலாஜி சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்

பாகுபலி 2 படத்தை டவுன்லோடு பண்ணி பார்த்தால் கம்ப்யூட்டரே காரித் துப்பிடும் என்று கூறியுள்ளார் பாலாஜி. பாகுபலி 2 படம் தமிழகத்தில் ரிலீஸாகும் முன்பே இணையதளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
RJ Balaji posted on his FB page saying that, 'Watched a film that is gonna be d best Indian film fr a long time to come.Take a bow Rajamouli n team fr creating this proud epic #Bahubali. Bahubali2 is an amazing cinematic experience and by far the best by an Indian film.Idha download panni paatha, computeray kaari thuppidum!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil