ரஜினி – மோகன்பாபு சந்திப்பு...அப்படி என்ன தான் நடந்தது ?
ஐதராபாத் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மோகன் பாபு ஆகியோர் ஐதராபாத்தில் சந்தித்துள்ளனர். அப்போது நடத்தப்பட்ட ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை மோகன்பாபுவின் மகன் விஷ்ணு, ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ் என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

பொதுவாக உச்ச நட்சத்திரங்கள் இது போன்று ஃபோட்டோஷுட் நடத்துவதில்லை என்பதால் இந்த ஃபோட்டோக்கள் எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ரஜினி - மோகன்பாபு அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம் என்றாலும், இதுவரை இது போன்ற ஃபோட்டோக்கள் வெளியானதில்லை.
இந்த ஃபோட்டோக்கள் சமூக வளைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மோகன்பாபுவின் மகளும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சுவும், இரு ஸ்டார்களுடன் ஃபோட்டோ எடுத்திருந்தார். இந்நிலையில் இந்த சந்திப்பு பற்றி உண்மையில் என்ன நடந்தது என லட்சுமி சமூக வலைதளத்தில் எழுதி உள்ளார்.
அதில், பல காலமாக நட்பு பற்றி எனக்கு பலவிதமாக அர்த்தங்கள் இருந்தது உண்டு. சிறு வயது முதல் நண்பர்களாக இருந்தவர்கள், எப்போதும் நண்பர்களாக இருந்ததில்லை. சில சமயங்களில் மாறுவதும் உண்டு. ஆனால் இவர்கள் தொடர்ந்து இப்போது வரை நண்பர்களாக உள்ளனர். இவர்களை பார்க்கும் போது தொடர்ந்து நட்பு மீது நம்பிக்கை பிறக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர்கள் இருவரும் ஒரு டீயை இருவரும் பகிர்ந்து குடித்தவர்கள். கார்செட்டில் காலத்தை கழித்தவர்கள். இன்று இருவரும் தங்கள் துறைகளில் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர். ஆனால் இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து கொள்கிறார்கள். ஃபோன் செய்து பேசி, விசாரித்துக் கொள்கின்றனர். பிஸியாக இருக்கும் சமயங்களிலும் விசாரித்து கொள்கின்றனர்.

இருவரும் வெகு தூரம் நடந்து சென்று, பேசிக் கொண்டே செல்வார்கள். கடவுள் ஒருவருக்கு தான் தெரியும் அவர்கள் அப்படி என்ன தான் பேசிக் கொள்கிறார்கள் என்று. ஆனால் இந்த நட்பு தூய்மையானது, ஆழமானது. மாமா, எங்கள் அப்பா போன்று நட்பு கிடைக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











