»   »  கமலின் 'விஸ்வரூபம் 2' என்னதான் ஆனது?

கமலின் 'விஸ்வரூபம் 2' என்னதான் ஆனது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் நாளை மறுநாள் புதிய படங்களைத் தொடங்குகிறார். இது அவரது ராஜ்கமல் நிறுவனத்தின் 41, 42, 43 வது படங்கள் என்று விளம்பரங்கள் சொல்கின்றன. லைகாவும் கமலுடன் இணைந்து இந்தப் படங்களைத் தயாரிக்கிறது.

சரி, விஸ்வரூபம் 2 என்று ஒரு படம் தயாரித்து இயக்கி நடித்தாரே கமல் ஹாஸன்... அந்தப் படம் என்னதான் ஆனது?


தமிழ் - இந்தி

தமிழ் - இந்தி

கமலுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், வஹிதா ரஹ்மான் போன்றோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழில் ஆஸ்கர் பிலிம்ஸும், இந்தியில் ஏக்தா கபூரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.


3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கிடப்பில் உள்ள படம் இது. விஸ்வரூபம் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே, இந்த இரண்டாம் பாகத்தின் பாதிப் படத்தை எடுத்துவிட்டார் கமல் ஹாஸன். அதன் பிறகு தாய்லாந்து உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் கவனித்தார்.


தள்ளிப் போனது

தள்ளிப் போனது

2014-ம் ஆண்டிலேயே படத்தை வெளியிடப் போவதாக அறிவித்தனர். ஆனால் அடுத்தடுத்து பலமுறை தள்ளிப் போனது இப்படத்தின் ரிலீஸ்.


ஆஸ்கர் ரவிச்சந்திரன்

ஆஸ்கர் ரவிச்சந்திரன்

2015-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் படம் குறித்த பேச்சே இல்லை. அப்போதுதான் இந்தப் படம் குறித்த சில விஷயங்களை பத்திரிகைகளிடம் பகிர்ந்து கொண்டார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். படம் முழுமையடையவில்லை என்றும், இன்னும் பத்து சதவீத படப்பிடிப்புக்கு பணம் வேண்டும் என கமல் கேட்டதால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

ஒரு கட்டத்தில், படத்தை யாரிடமாவது கைமாற்றும் மனநிலையில் இருப்பதாகவும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறினார். அப்போது 'மீதிப் படத்தையும் முடித்து நானே வெளியிட்டுக் கொள்கிறேன்' என கமல் கூறிவிட்டதாகத் தெரிகிறது.


பணம் பிரச்சினை

பணம் பிரச்சினை

படத்துக்கு நான் செலவழித்த தொகையை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.. வட்டி கூட வேண்டாம் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதிலுக்குக் கூற, அதே நிலையில் விஸ்வரூபம் 2 நிற்கிறது.


இந்த நேரத்தில்தான் கமல் தனது மூன்று புதிய படங்களை அறிவித்துள்ளார்.English summary
What happened to Kamal Hassan's Viswaroopam 2? Here is the present status of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil