»   »  என்ன ஆச்சு குற்றப்பரம்பரை? இதுக்கு தானா இப்படி அடிச்சிக்கிட்டீங்க?

என்ன ஆச்சு குற்றப்பரம்பரை? இதுக்கு தானா இப்படி அடிச்சிக்கிட்டீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரதிராஜாவையும் பாலாவையும் பார்த்து சினிமா ரசிகர்கள் கேட்கும் கேள்வி இதுதான்... காரணம்

குற்றப்பரம்பரைக்காக சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மாறி மாறி பிரஸ்மீட் வைத்து திட்டிக்கொண்டார்கள். ஆனால் இரண்டு படங்களுமே கடலில் போட்ட கல் போல கிடக்கின்றன.


What happened to Kutraparambarai?

இயக்குநரும் கதாசிரியருமான ரத்னகுமார் எழுதிய குற்றப்பரம்பரை கதையை சினிமாவாக எடுக்கப் போகிறேன். அதுதான் என் கனவுப் படம் என்று பல ஆண்டுகளாக சொல்லி வந்தார். இந்நிலையில் வேல.ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையைத் தழுவி பாலா படம் எடுக்கப்போவதாக தகவல் வர, அவசரம் அவசரமாக ஒரு பூஜையை உசிலம்பட்டியில் போட்டார் பாரதிராஜா. நடிகர்களைக் கூட அறிவிக்காமலேயே!


இன்னொரு பக்கம் பாலாவோ தன் படத்தில் விஷால், ஆர்யா, அதர்வா, அனுஷ்கா, மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவே அறிவித்தார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் இன்னமும் இரண்டு படங்களுமே 'செல்ஃப்' எடுக்கவில்லை.


பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளரே கிடைக்கவில்லை. எனவே புதுமுகங்களை வைத்து அலைகள் ஓய்வதில்லை பார்ட் 2 எடுக்க ஆயத்தமாகி விட்டார்.


பாலா சொன்ன யாருமே பாலாவின் படத்தில் நடிக்க தயாராக இல்லையாம். எனவே பாலாவும் வேறு படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.


எடுக்காத படத்துக்கு என்னா ஒரு அடிதடி..!

English summary
Veteran Barathiraja and Bala have finally dropped their idea of taking Kutraparambarai versions for that bothe have clashed severely a couple of months ago.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil