Don't Miss!
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
அமுதவாணனுக்கு என்ன ஆச்சு..ரத்தம், ரத்தம்னு தூக்கத்தில் உளறல், ..நடுராத்திரியில் அலறி ஓடிய மணிகண்டன்
ரத்தம் வேண்டும், ரத்தம் வேண்டும் என அமுதவாணன் தூக்கத்தில் அரற்றியதால் பக்கத்தில் படுத்திருந்த மணிகண்டன் அலறி அடித்து ஓடினார்.
பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவு வரை தூங்காமல் பேசிக்கொண்டிருப்பார்கள். பின்னர் படுக்கைக்கு வருவார்கள். சிலர் 2 பேர் ஒரே கட்டிலில் படுத்திருப்பார்கள்.
அப்படி அமுதவாணனுடன் படுத்திருந்த மணிகண்டன் அமுதவாணன் தூக்கத்தில் அரற்றியதால் அலறி அடித்து ஓடினார்.
Bigg
Boss
Tamil
6:
என்னை
மட்டும்
ஏன்
கேட்கிறீங்க..
ஜட்ஜ்
குயின்ஸியிடம்
எகிறிய
அமுதவாணன்!

ஒரே வீட்டில் பிரபலங்கள்
பிக்பாஸ் வீட்டில் பல விநோதங்கள் நடக்கின்றன. பிரபலங்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். சாதாரண பொதுமக்கள் அண்ணாந்து பார்க்கும் நிலையில் உள்ள சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் ஒரு வீட்டிற்குள் அடைந்து கிடந்தால் அவர்களது இயல்பு வெளிப்படும். ஆரம்பத்தில் பலரும் கேமராக்கள் சுற்றி இருப்பதால் வழக்கமாக தங்கள் போலித்தனத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் நாள் ஆக ஆக கேமரா இருப்பதை மறந்துவிடுவார்கள். இயல்பு நிலை வெளிப்படும்.

பிரபலமானவர்களின் அல்பத்தனம்
இதனால் தான் பிக்பாஸ் வீட்டில் அனைத்து கூத்துகளும் நடப்பதை பார்க்கலாம். மனதறிந்து பொய் சொல்பவர்கள் குறும்படம் மூலம் சிக்கி கொள்வதும், அன்பாக இருப்பது போல் காட்டிக்கொள்பவர்கள் நேரம் கிடைக்கும் போது முதுகில் குத்துவதையும், சுயநலத்துடன் வீட்டில் எது நடந்தாலும் கண்டுக்கொள்ளாமல் தங்கள் காரியத்தை சாதிப்பவர்களையும் பார்க்கும் மக்கள் இவ்வளவு பிரபலமானவர்கள் இவ்வளவு அல்பத்தனமாக இருக்கிறார்களே என்று கடுப்பாவார்கள்.

யதார்த்தவாதிகள் தப்பிக்கிறார்கள்
இதில் யதார்த்தமாக நடப்பவர்கள், பெண்களுடன் பழகுவதில் கண்ணியத்தன்மையுடன் செயல்படுபவர்கள் எதிலும் சிக்க மாட்டார்கள்.பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் மற்ற சீசன் போட்டியாளர்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் கோஷ்டி சேர்ந்தாலும் தங்கள் போட்டியை சிறப்பாக விளையாடுகிறார்கள். இதில் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணன் பின்னர் விக்ரமன் மீது கொண்ட பொறாமையாலும், ஜனனியின் சூழ்ச்சியில் சிக்கியதாலும் தனது நிலை இழந்து மதிப்பிழந்து காணப்படுகிறார். எவிக்ஷன் லிஸ்ட்டில் 4 பேரில் ஒருவராக இருக்கிறார்.

கட்டிலில் படுத்துக்கொண்டு அலறிய அமுதவாணன்
இந்நிலையில் நேற்றிரவு அவர் தனது படுக்கையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவருடன் கட்டிலில் ஒன்றாக தூங்குபவர் மணிகண்டன். அவர் வெளியில் சிறையில் அடைக்கப்பட்ட ராபர்ட் மாஸ்டருடன் பேசிவிட்டு படுக்கைக்கு திரும்பினார். அமுதவாணன் பக்கத்தில் படுத்த சில நிமிடங்களில் படுக்கையிலிருந்தவாரே மைனாவிடம் ஏதோ சொன்னார். அவர் முகத்தில் கடுமையான பயம் இருந்தது. மைனா அவரிடம் பதிலுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென எழுந்து மைனா பக்கம் ஓடிவந்தார் மணிகண்டன்.

அலறி அடித்து ஓடிய மணிகண்டன்
மைனாவிடம் வந்த மணிகண்டன் ஏய் என்ன இவரு ரத்தம் வேணும், ரத்தம் ரத்தம்னு சொல்கிறார் எனக்கு பயமாக இருக்கு என்றார். ஏதாவது பிராங்க் பண்ணுவார் போய் படு, என மைனா சொல்ல இல்ல அவரு உண்மையாகவே தூங்குகிறார், தூக்கத்தில் தான் அப்படி பேசுகிறார் என மணிகண்டன் சொல்ல மைனா எழுந்து வந்து அமுதவாணன் பக்கத்தில் வந்து காது வைத்து கேட்க ஏய் ஆமாடா என்னென்னவோ சொல்கிறார் என பக்கத்து பெட் ஏடிகேவிடம் சொல்ல அவர் எழுந்து அமுதவாணன் பக்கத்தில் சென்று கேட்டுவிட்டு சிரித்தார்.

மனுஷன பைத்தியக்காரன் ஆக்காதீங்க கோபப்பட்ட அமுதவாணன்
இதற்குள் சத்தம் கேட்டு அசீம் எழுந்து வந்தார், அவர் என்னவென்று கேட்க அமுதவாணன் தூக்கத்தில் ரத்தம் வேண்டும், "தத்தா..தத்தா..ராபர்ட் மாஸ்டர் போகக்கூடாது, வீட்டில் இருக்கணும் சத்யம் ஜெயிக்கணும், ராம் போகணும், ரத்தம் வேண்டும், ரத்தம் வேண்டும்" என பிதற்றிக்கொண்டிருந்ததாக சொன்னார். அனைவரும் பயத்தில் இருந்தனர். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட மைனா அமுதவாணனை எழுப்பினார். அவர் எழுந்தவுடன் அனைவரையும் முறைத்து பார்த்தார். ஏய் என்ன என்னென்னமோ பேசுற ரத்தம் என்கிறாய் என்ன ஆச்சு உனக்குன்னு மைனா கேட்க எதுவும் சொல்லாமல் எழுந்து போர்வையை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியே சென்றார். அப்பவும் மைனா கேட்க ஒரு மனுஷன பைத்தியக்காரன் ஆக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.

அமுதவாணனுக்கு என்ன ஆச்சு, அமானுஷ்ய மனிதரா குழம்பும் ஹவுஸ் மேட்ஸ்
அன்றைக்கு தனலட்சுமியை பயமுறுத்தியது கூட உண்மையாக நடந்திருக்கும், அவன் சுய நினைவு இல்லாதது போல் இருந்தான் என அசீம் சொன்னார். தன்னிடம் நாக சக்தி இருப்பதாக சொல்வான் என அசீம் சொன்னார். அதன் பின்னர் கட்டிலில் பயந்தவாரே மணிகண்டன் படுக்க அசீம் தைரியமா படுடா கடவுள் இருக்கிறார் என்று சொல்ல, மைனா குங்குமம் வேண்டுமா தரட்டா எனக்கேட்க இல்லை திருநீறு இருக்கு என பக்கத்தில் இருந்த திருநீற்றை நெற்றியிலும் இட்டுக்கொண்டு, அமுதவாணன் படுத்திருந்த இடத்திலும் தூவி விட்டு படுத்தார் மணி கண்டன். இந்தப்பிரச்சினைக்கு பின் காலையில் அனைவரையும் தூங்க விட்டார் பிக்பாஸ்.