twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிப்பு.. கார்டியாக் அரெஸ்ட்.. கேவி ஆனந்தின் மரணம்.. நடந்தது என்ன?

    |

    சென்னை: இயக்குநர் கேவி ஆனந்த் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

    ஒளிப்பதிவாளர், இயக்குநர், போட்டோ ஜர்னலிஸ்ட் என தொட்ட துறையில் எல்லாம் வெற்றி தடம் பதித்தவர் இயக்குநர் கேவி ஆனந்த்.

    அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம்… சிம்புவின் உருக்கமான பதிவு ! அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம்… சிம்புவின் உருக்கமான பதிவு !

    தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தவர் கேவி ஆனந்த். தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

    ஏராளமான விருதுகள்

    ஏராளமான விருதுகள்

    மீரா, சிவாஜி, மாற்றான், கவண் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் கேவி ஆனந்த். தேசிய விருது மட்டுமின்றி, பிலிம் பேர் விருது, சைமா விருது, சிக்கா விருது என ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் கேவி ஆனந்த்.

    இரண்டு வாரங்களுக்கு முன்பு

    இரண்டு வாரங்களுக்கு முன்பு

    இந்நிலையில் இன்று காலை இயக்குநர் கேவி ஆனந்த் காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டு வாரங்களுக்கு முன்பு இயக்குநர் கேவி ஆனந்தின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    தொண்டை வலி

    தொண்டை வலி

    இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே உடல் சோர்வு மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டார்.

    கொரோனா தொற்று

    கொரோனா தொற்று

    இதனை தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி தானாகவே சென்னை மியாட் மருத்துவமனைக்கு சென்றார் இயக்குநர் கேவி ஆனந்த். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    நேற்று சந்திப்பு

    நேற்று சந்திப்பு

    இதனை தொடர்ந்து மூச்சு திணறலும் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கேவி ஆனந்த். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேவி ஆனந்தை அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் நேரில் சந்தித்துள்ளனர்.

    உடல் ஒப்படைக்கப்படவில்லை

    உடல் ஒப்படைக்கப்படவில்லை

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கேவி ஆனந்துக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி கேவி ஆனந்த் உயிர்பிரிந்தது. கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்ததால் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    வீட்டின் முன்பு சில நிமிடங்கள்

    வீட்டின் முன்பு சில நிமிடங்கள்

    மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மயானத்திற்கு செல்லும் வழியில் வீட்டின் முன்பு ஆம்புலன்ஸிலேயே அவரது உடல் குடும்பத்தினரின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உடல் தகனம்

    உடல் தகனம்

    சில நிமிடங்கள் ஆம்புலன்ஸிலேயே இருந்த நிலையில் பின்னர் பெசன்ட்நகர் மின்மயானத்தில் கேவி ஆனந்தின் உடல் இறுதிச்சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. மருத்துவமனையில் செய்ய வேண்டிய ஃபார்மாலிட்டிஸ் அனைத்தையும் நடிகர் சூர்யாவே செய்து முடித்தார்.

    English summary
    what happened to Director KV Anand? KV Anand passed away due to Cardiac arrest. He also under treatment for Covid 19.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X