»   »  'தலைவர்' அரசியலுக்கு வருவது பற்றி நான் நினைப்பது மேட்டரே இல்லை: தனுஷ்

'தலைவர்' அரசியலுக்கு வருவது பற்றி நான் நினைப்பது மேட்டரே இல்லை: தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து மக்கள் நினைப்பது தான் முக்கியம். தான் நினைப்பது முக்கியம் இல்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவது குறித்து பேசினார். அவரை தங்களின் பக்கம் இழுக்க சில கட்சிகள் முயன்றன.

இந்நிலையில் ரஜினி தனிக்கட்சி துவங்கப்போவதாக கூறப்படுகிறது.

ரஜினி

ரஜினி

நான் அரசியலுக்கு வருகிறேன், தனிக்கட்சி துவங்குகிறேன் என்று ரஜினி பளிச்சென்று கூறவில்லை. ஆனால் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என அவரின் நண்பர் ராஜ்பகதூர் மற்றும் சகோதரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்

தனுஷ்

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரின் மருமகன் தனுஷிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், நான் என்ன நினைக்கிறேன் என்பது அல்ல மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்றார்.

மலையாளம்

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளது. தனுஷ் தயாரிக்கும் முதல் மலையாள படம் தரங்கம். டொவினோ தாமஸ் நடிக்க டோமினிக் இயக்குகிறார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

பிலிம்பேர் விருது நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்பவர் தனுஷ். இந்த ஆண்டு விருது நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. தனுஷ் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பார் என்பதால் விருது விழாவில் கலந்து கொள்ள மாட்டாராம்.

English summary
When asked what he he thinks about Rajini's political speech, Dhanush said what people think matters more than what he think.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil