Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என்னது...ப்ரத்விராஜ் தோல்விக்கு அக்ஷய்குமார் தான் காரணமா...தயாரிப்பாளர் சொன்ன பகீர் தகவல்
மும்பை : அக்ஷய் குமார் மற்றும் மனுஷி சில்லர் நடித்த வரலாற்று படம் சாம்ராட் ப்ருத்விராஜ். டைரக்டர் சந்திரபிரகாஷ் திரிவேதி இயக்கிய இந்த படத்தை ஆதித்ய சோப்ரா தயாரித்திருந்தார்.
சஞ்சய் தத், சோனு சூட் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்த இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. வரலாற்று ஆக்ஷன் படமா சாம்ராட் ப்ருத்விராஜ், கிட்டதட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
2019 ம் ஆண்டே துவங்கப்பட்ட இந்த படத்தின் வேலைகள், கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமானது. ஆரம்பத்தில் ப்ருத்விராஜ் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் டை்டடில் பிறகு சாம்ராஜ்ட் ப்ருத்விராஜ் என மாற்றப்பட்டது.
ஷாருக்கானின்
'ஜவான்'
படத்தில்
விஜய்யா?..பாலிவுட்டில்
கால்
பதிக்கும்
விஜய்!

இத்தனை கோடி இழப்பா
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்ராட் ப்ருத்விராஜ் படம் 2022 ம் ஆண்டின் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்தது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வெறும் ரூ.100 கோடியை மட்டுமே வசூல் செய்தது. அது மட்டுமல்ல ரிலீசுக்கு முன்பிருந்தே பல சர்ச்சைகளையும் இந்த படம் சந்தித்தது.

11 டிக்கெட் தான் விற்றது
இது இந்து மன்னன் பற்றிய வரலாற்று படம் என்பதால் ஐக்கிய அரபு நாடுகள் பலவற்றில் இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு நாளில் நாடு முழுவதுமே இந்த படத்திற்கு வெறும் 11 டிக்கெட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இந்த படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி படக்குழுவை சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி வருகிறார்கள்.

அக்ஷய் குமாரின் குற்றச்சாட்டு
இதில் படத்தின் ஹீரோவான அக்ஷய் குமார், ப்ருத்விராஜை பாட புத்தங்களில் இருப்பதை போல் அல்லாமல் மிகவும் குறைத்து மதிப்பிட்டு காண்பிக்கப்பட்டதே படத்தின் தோல்விக்கு காரணம் என கூறி இருந்தார். ஆனால் இதனை ஏற்காத படத்தில் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமே அக்ஷய் குமார் தான் என குற்றம்சாட்டி உள்ளனர்.

அக்ஷய் குமார் தான் காரணமா
தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் தரப்பிடம் கேட்டதற்கு, அக்ஷய் குமார் கேட்க மாட்டார். அர்ப்பணிப்பு உணர்வுடன், மிக கவனமாக பணியாற்ற வேண்டிய படம் இது. ஆனால் அவர் ஒரு மீசையை கூட வளர்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். ஒரே நேரத்தில் மற்ற படங்களிலும் நடித்து வந்ததால் இந்த படத்தில் இவர் கவனம் செலுத்த தவறி விட்டார்.

இவர் அது கூட செய்யவில்லை
மற்றவர்கள் வரலாற்று படத்திற்காக எவ்வளவு கவனம் செலுத்தி, எத்தனை மெனக்கெடுகிறார்கள். ஆனால் இவர் இந்த ஒரு படத்திற்காக ஒரு சாதாரண விஷயத்தை கூட செய்ய மாட்டேன் என்று மறுத்து விட்டார். அனைவரும் தங்கள் நடிக்கும் படத்திற்காக பெஸ்ட் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இவர் குறைந்த பட்ச கவனம் கூட செலுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டை மறுத்த டைரக்டர்
ஆனால் தயாரிப்பாளர்களின் இந்த குற்றச்சாட்டையும், படத்தின் தோல்விக்கு அக்ஷய் குமார் தான் காரணம் என்பதையும் மறுத்துள்ளார் படத்தின் டைரக்டர் சந்திரபிரகாஷ் திரிவேதி. அவர் கூறுகையில், இந்த 4 வருடங்களாக நடிகர் என்பதை தாண்டி நாங்கள் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறோம். அவர் என்னை விட வயதில் இளையர் தான். ஆனால் ஒரு நல்ல வழிகாட்டியாக அவர் இருந்துள்ளார். அவ்வளவு ஏன், அவர் இல்லை என்றால் இந்த படத்தையே எடுத்திருக்க முடியாது.

தோல்விக்கு நான் தான் காரணம்
சாம்ராட் ப்ருத்விராஜ் படத்தின் தோல்விக்கு யாரையாவது பொறுபாக்க வேண்டுமானால் என்னை சொல்லுங்கள். எனது ரசிகர்களை நான் புரிந்து கொள்ளாதது தான் இதற்கு காரணம். அக்ஷய் குமாரின் கடந்த கால சர்ச்சைகளால் தான் இந்த படத்தை ரசிகர்கள் புறக்கணித்தார்கள். அவரது முழு முயற்சியையும் கொடுத்து தான் இந்த படத்தில் அவர் நடித்தார் என்றார்.