»   »  ஐஸ்வர்யா ராய், தீபிகா இடையே இருக்கும் அந்த '3' ஒற்றுமை: சொல்கிறார் இயக்குனர் பன்சாலி

ஐஸ்வர்யா ராய், தீபிகா இடையே இருக்கும் அந்த '3' ஒற்றுமை: சொல்கிறார் இயக்குனர் பன்சாலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோனே இடையேயான ஒற்றுமை குறித்து பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனேவை வைத்து ராம் லீலா மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களை அடுத்தடுத்து எடுத்தார். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. இரண்டு படங்களின் ஹீரோவும் ரன்வீர் சிங் தான்.

இந்நிலையில் பன்சாலி ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா பற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் எனக்கு கற்பனையை அளிப்பவர். அவரது கண்ணை பார்த்தால் போதும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்வார். அவர் ஒரு சிறப்பான நடிகை.

தீபிகா

தீபிகா

ஒரு நடிகையாக தீபிகா வளர்ந்துவிட்டார். அவர் போன்று என் படங்களில் வேறு யாரும் நடித்திருக்க முடியாது. அதிலும் மஸ்தானி மிகவும் ஸ்பெஷலானது.

ஒற்றுமை

ஒற்றுமை

ஐஸ்வர்யா, தீபிகாவுக்கு இடையேயான ஒற்றுமை பற்றி சொல்வது என்றால், ஒருவர் என்னுடன் 3 படங்கள் பண்ணியுள்ளார், மற்றொருவர் 2 படங்களில் நடித்துள்ளார். இருவருமே அழகானவர்கள். இருவருமே மங்களூரை சேர்ந்தவர்கள். இருவருமே என் தோழிகள்.

கரீனா

கரீனா

ராம் லீலா படத்தில் கரீனா கபூர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு துவங்க 10 நாட்கள் இருக்கையில் அவர் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து நான் தீபிகாவை பார்க்க சென்றேன். அவர் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

English summary
Bollywood director Sanjay Leela Bhansali has pointed out the things that are common between Aishwarya Rai and Deepika Padukone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil