»   »  அது என்ன 'காலா'ன்னு ஒரு தலைப்பு?: பா. ரஞ்சித் விளக்கம்

அது என்ன 'காலா'ன்னு ஒரு தலைப்பு?: பா. ரஞ்சித் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு வைக்கப்பட்டுள்ள காலா என்ற தலைப்பு குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

கபாலியை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்கு காலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ட்விட்டர் மூலம் இன்று காலை அறிவித்தார்.


தலைப்பை கேட்டு ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


காலா

காலா

படத் தலைப்பை கேள்விப்பட்ட பலர் அது என்ன காலா என்று கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் காலா என்பதற்கான அர்த்தத்தை பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


தமிழ் அரசர்

தமிழ் அரசர்

காலா என்பது நீதியும் நேர்மையும் கொண்ட தமிழ் அரசர் கரிகாலனை குறிக்கும். திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ கடவுள் 'காலா'. மும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கைதான் காலா படம் என்று ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.


படப்பிடிப்பு

படப்பிடிப்பு

படக்குழு ஏற்கனவே மும்பை கிளம்பிவிட்டது. வரும் 28ம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார். 28ம் தேதி ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


ரஜினி

ரஜினி

ரஜினி மூன்று வாரங்கள் மும்பையில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். படப்பிடிப்பின் பெரும்பகுதி தாராவி பகுதியில் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


English summary
Director Pa. Ranjith has given explanation to the title of his upcoming movie starring Rajinikanth. The movie is titled Kaala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil