»   »  திடீர் என மாயமான பிரபாஸ் ஹீரோயின் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

திடீர் என மாயமான பிரபாஸ் ஹீரோயின் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரபாஸ் ஜோடியாக நடித்த நடிகை அன்ஸு தற்போது என்ன செய்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

பிரபாஸ் ஜோடியாக ராகவேந்திரா படத்திலும், நாகர்ஜுனா ஜோடியாக மன்மதுடு படத்திலும், பிரஷாந்த் ஜோடியாக ஜெய் படத்திலும் நடித்தவர் அன்ஸு. அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் தேடியபோது காணாமல் போய்விட்டார்.


நடிக்க வந்த வேகத்தில் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.


திருமணம்

திருமணம்

அன்ஸுவின் கெரியர் பிக்கப்பான நேரத்தில் அவர் மாயமானார். அன்ஸு சச்சின் சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலாகியுள்ளது தெரிய வந்துள்ளது.


தாய்

தாய்

அன்ஸு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் லண்டனில் துணிக் கடை வைத்து நடத்தி வருகிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


நடிகைகள்

நடிகைகள்

வழக்கமாக நடிகைகள் மார்க்கெட் படுக்கும் வரை நடித்துவிட்டு திருமணம் செய்து செட்டிலாவார்கள். ஆனால் அன்ஸு மார்க்கெட் இருந்தபோது செட்டிலாகி தொழில் அதிபர் ஆகிவிட்டார்.


லண்டன்

லண்டன்

அன்ஸு லண்டனை சேர்ந்தவர் தான். அங்கு வளர்ந்த அவர் படங்களில் நடிக்க இந்தியா வந்தார். பின்னர் லண்டனுக்கு திரும்பிச் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார்.


மரணம்

மரணம்

அன்ஸு காணாமல் போன புதிதில் அவர் விபத்தில் இறந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அவர் நடித்த இரண்டு தெலுங்கு படங்களிலுமே இறந்துவிடுவார். உண்மையில் அன்ஸு நலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Ansu who acted with Prabhas, Nagarjuna and Prashanth is a mother of two living happily with her husband Sachin in London.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil